தமிழர் இழந்த நிலம்- 22
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
நிருபர்-தமிழ் தாலுகாக்களான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, கொச்சின், சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாள நாட்டோடு சேர்ந்து விட்டதே... இதுபற்றி உங்கள் கருத்தென்ன...?
பதில்-இது பற்றி எனக்கு கவலையில்லை
மலையாள நாட்டுடன் அவைகளை சேர்க்க வேண்டியதுதான்.
நிருபர்-கவலை இல்லை என்கிறீர்களே... அவை தமிழ் தாலுகாக்கள் தானே..?
பதில்-ஆமாம் சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்து பேசினேன். தொழிலுக்காகத்தான் தமிழர்கள் அங்கு (தேவிகுளம் -பீர்மேடு) வந்தார்களே தவிர, நிலம் மலையாளிகளுக்கு சொந்தமானது என்று பணிக்கர் சொன்னார் நானும் சரி என்று சொல்லி விட்டேன்.
11-10-1956 அன்று திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டிதான் மேலே நீங்கள் படித்தது.
இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கமிட்டியினுடைய உறுப்பினர் என்பவர், கிட்டத்தட்ட அந்தக் கமிட்டியின் அறிக்கை வெளிவரும் வரை,கமிட்டியினுடைய நோக்கம் தொடர்பாக யாரையும் சந்திக்க கூடாது என்கிறது மொழிவழி பிரிவினைக்குழுவினுடைய சட்டவிதி.
அந்த அடிப்படையில் சர்தார் கே எம் பணிக்கர் அவர்கள் பெரியாரை வந்து சந்தித்ததே முதல் தவறு.
அடுத்த தவறு... ஒரு இயக்கவாதியாக, சமூக சீர்திருத்தவாதியாக முன்னிறுத்தப்படும் தந்தை பெரியாரை, எதற்காக கே எம் பணிக்கர், தேவிகுளம் பீர்மேடு விடயமாக சந்திக்கவேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கியிருக்கும் ஒரு ஆபத்தான கமிட்டியினுடைய உறுப்பினர், ஒன்று தமிழகம் வந்து அன்றைக்கு சென்னை மாகாண முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை சந்தித்து இருக்க வேண்டும்.அல்லது தேவிகுளம் பீர்மேட்டை தாய் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்,,,, திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மார்ஷல் நேசமணி அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்.
இல்லையேல் இதற்காக சென்னையில் ஒரு அணிதிரட்டலை நடத்தும் ம பொ சி அவர்களை சந்தித்திருக்கவேண்டும்.
எதற்காக பெரியாரைச் சந்தித்தார் பணிக்கர்...
பிரச்சனைக்குரிய செங்கோட்டை தாலுகா முழுவதையும் மொழிவழி பிரிவினைக் கமிட்டி தமிழகத்திற்கு வழங்கிய போதும், செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதியில் இருந்த வளம் கொழிக்கும் வனப்பகுதிகளை, கேரளா எடுத்துக் கொள்வதற்கு காரணமாக இருந்ததும் இந்த சர்தார் கே.எம்.பணிக்கர்தான்.
பணிக்கருக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார் என்கிற பிரம்மாண்டமான கேள்வி... உணர்வுள்ள அத்தனை தமிழர்கள் நெஞ்சிலும் எழுந்து நிற்கிறது.
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் கையெழுத்து போட்டு எனக்கு கடிதம் எழுதினார்கள்...அதனால் நான் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று விடுதலையில் எழுதிய தந்தை பெரியார்,,,தேவிகுளம் பீர்மேட்டிலிருந்து எந்த அப்பாவி தமிழனாவது கடிதம் எழுதினால் கலந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாரா...?
18 மாதங்கள் நாடு முழுவதும் பயணம் செய்த மொழிவழிப் பிரிவினை குழு, கிட்டத்தட்ட மொழியை அடிப்படையாக வைத்தே எல்லைகளை பிரித்த நிலையில், தேவிகுளம் பீர்மேடு விடயத்தில் மட்டும் மொழியை ஏற்க மறுத்தது ஏன்...?
கே.எம். பணிக்கர் என்கிற சர்வாதிகாரியின் முடிவை, பசல் அலியும்,குன்ஸ்ருவும் முன்மொழிந்து.., பண்டித நேருவுக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் வழிமொழிந்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் மொழியை அடிப்படையாக வைத்து எல்லைகளை பிரிப்பார்களாம். ஆனால் தேவிகுளம் பீர்மேடு என்று வரும்போது மட்டும்,
"பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவிப்பார்களாம்.
என்னடா அயோக்கியத்தனம் இது...
அன்றைக்கு தமிழ்நிலமே
திராவிடமயமாகி கிடந்ததால், பண்டித நேருவும், பணிக்கரும் மேற்கொண்ட இந்த எதேச்சதிகாரத்தை கேட்க ஆளின்றி போனது.
அன்றைக்கு கேரளாவில் புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த திரு. கோவிந்தபிள்ளையினுடைய "எல்லாவற்றையும் பணிக்கர் பார்த்துக் கொள்வார்" எனும் ஒப்பற்ற கருத்தை உண்மையாக்க... பணிக்கர் மட்டுமல்ல தந்தை பெரியாரும் அவருடன் சேர்ந்து உழைத்தார் என்பதுதான் உண்மை.
என்னுடைய சந்தேகம் பணிக்கருக்கும் தந்தை பெரியாருக்குமிடையே நடந்த உரையாடலில் அன்றைக்கு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யரும் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்...
ஐக்கிய கேரளம் என்கிற சிறு பொறியை பெரு நெருப்பாக்கியதில் எவருக்கும் சளைத்தவரல்ல இந்த வி .ஆர். கிருஷ்ணய்யர். மானத் தமிழர்கள் இந்த கிருஷ்ணய்யர் பெயரில் ஒரு மண்டபமே கட்டியிருக்கிறார்கள் மதுரையில்... தமிழனின் நன்றி உணர்ச்சிக்கு ஈடு இணை எதுவும் உண்டா...?
தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையில் மொழியைத் தாண்டிய சிக்கல் எழுந்ததை கண்ணுற்ற பட்டம் தாணுபிள்ளை...
திருவிதாங்கூர் கொச்சி சிறைகளில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்து,,, பீர்மேடு தேவிகுளம் பகுதிகளில் குடியேற்றுவதற்குண்டான அத்தனை வேலைகளையும் செய்ய ஆயத்தமானார்.
ஒட்டுமொத்த திருவிதாங்கூர் கொச்சியும் ஓரணியில் நின்று, களம் கண்டதால், இந்த குடியேற்றத்திற்கு பெருத்த ஆதரவு இருந்தது.
வனப்பகுதி நிலங்களை எளியதொரு சட்டத் திருத்தத்தின் மூலம் வருவாய் நிலங்களாக மாற்றினர் பட்டம் தாணுப்பிள்ளை...
மாற்றியதோடு 2 ஏக்கர் நிலம், கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் வசதி, ஐயாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவைகளை கொடுத்து, தமிழர் பெருத்துக் கிடந்த தேவிகுளம் பீர்மேட்டில் மலையாளக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்..
அப்படி பட்டம் தாணுபிள்ளையால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகள்தான் கம்பம்மெட்டு
தூக்கு பாலம்
ஆன விலாசம் பாறத்தோடு
நெடுங்கண்டம் பூப்பாறை
சாந்தம்பாறை
சாக்கு பள்ளம்
பாம்பனாறு வண்டிப்பெரியாறு
பீர்மேடு
குட்டிக்கானம் உள்ளிட்ட பகுதிகள் எல்லாம்...
சமூக சீர்திருத்தவாதியாக முன்னிறுத்தப்படும் தந்தை பெரியார்...
எந்த அரசுப் பதவியிலும் இல்லாத தந்தை பெரியார்...
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று புகட்டிய தந்தை பெரியார்...
மனிதனை மனிதனாக நடத்துவதே தன்னுடைய முதல் குறிக்கோள் என்று முழங்கிய தந்தை பெரியார்...
கே.எம். பணிக்கர் என்கிற படுபாதகனைச் சந்தித்து,,,1400 சகிமீ பரப்பளவுள்ள வளமான நிலங்களை, கேரளாவோடு இணைப்பதற்கு காரணமாகி விட்டாரே...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மொழி அடிப்படையில் பிரிக்க முடியாது என்கிற மொழிவழி பிரிவினை கமிட்டியின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து "விடுதலை" என்ன செய்தது...
பெரியாரை சந்தித்தால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்கிற சூத்திரத்தை பணிக்கருக்கு சொல்லிக் கொடுத்தது யார்...?
வரலாறு நீளும்.......
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். jeethenthiran@gmail.com
பதிலளிநீக்கு