தமிழர் இழந்த நிலம்- 16
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவுக்கு உரிமையாக்க நடந்த கூட்டுச்சதியில்...
கேரளாவிலுள்ள
காங்கிரஸ்,
கம்யூனிஸ்டுகள்,
பிரஜா சோசலிஸ்ட் கட்சி,
முஸ்லிம் லீக்,
கேரளா சோஷலிஸ்ட் பார்ட்டி,
புரட்சிகர சோஷலிஸ்ட் பார்ட்டி,
கத்தோலிக்க காங்கிரஸ்
ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம், நாயர் சர்வீஸ் சொசைட்டி,... உள்ளிட்ட அனைத்துக்கட்சி, மற்றும் சாதி அமைப்புகளுக்கும்... வலுவான தொடர்பு இருந்தது...
இதில் வெளிப்படையாக... தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு செல்வதில் தங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லையென்று, முன்னின்று அந்த வேலைகளை செவ்வனே செய்து கொடுத்த தமிழக தலைவர்கள்...
தந்தை பெரியார் கர்மவீரர் காமராஜர் தோழர் பி.ராமமூர்த்தி தோழர் ஜீவா... உள்ளிட்ட அனைவருக்கும் இருந்தது...
சென்னையை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று மூர்க்கத்தனமாக முரண்டு பிடித்த ராஜாஜி, தேவிகுளம் பீர்மேடு விடயத்தில் துரும்பைக்கூட கிள்ளிப் போட தயாரில்லை...
அதே மனநிலையில்தான் அன்றைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இருந்தார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஐக்கிய கேரளத்தைப் உருவாக்கியே தீருவோம் என்று களத்தில் கங்கணம் கட்டி நின்ற மலையாள தலைவர்களான...
பட்டம் தாணுபிள்ளை,
ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்,
கோளப் பிள்ளை,
பி.டி. புன்னூஸ்,
கேரள காமுதி ஆசிரியர் கே பாலகிருஷ்ணன்,
கே.பி. கேசவ மேனன்,
சி.ஆர்.கிருஷ்ணபிள்ளை,
சி.அச்சுத மேனன், சங்கர் குரூப்,
ஜோசப் முண்டசேரி
ஆகியோர் ஒருகட்டத்தில் "ஐக்கிய கேரளம் எங்களது பிறப்புரிமை" என்று பிரகடனம் செய்தார்கள்...
இது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கேரளாவின் வடபகுதியில் உள்ள மலபார் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்களே அஞ்சும் அளவிற்கு இருந்தது, திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் நடவடிக்கைகள்...
கம்யூனிஸ்டுகள் கோலோச்ச போகும் ஐக்கிய கேரளத்தில், நமக்கு மரியாதை இருக்குமா என்று ஒரு கட்டத்தில் அஞ்சவும் செய்தார்கள்...
ஆனால் தமிழகத்தில் மட்டும் மொழிவழி பிரிவினை காலகட்டத்தில் பெருத்த அமைதி நிலவியது...
தென் எல்லையிலும், வடை எலையிலும் மட்டும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததே தவிர, ஐக்கிய தமிழகத்திற்கான முழக்கத்தை எழுப்புவதற்கு அன்றைக்கு எவரும் தயார் நிலையில் இல்லை.
1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கோழிக்கோட்டில் ஆய்வு நடத்திக்கொண்டிருந்த மொழிவழி பிரிவினை கமிட்டியிடம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான கே.பி. கேசவ மேனன் வைத்த கோரிக்கை,,,
இன்றைய தமிழ் இளைஞர்களுக்கான பாடம்.
திருவிதாங்கூர், கொச்சி,
மலபார்,
மங்களூர் காசர்கோடு உள்ளிட்ட தெற்கு கர்நாடகா,
லட்சத்தீவு,
கூடலூர்,
ஊட்டி,
பாண்டிச்சேரி யூனியனில் இன்றைக்கிருக்கும் மாகி,
காவிரி உற்பத்தியாகும்
குடகு மண்டலம் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஐக்கிய கேரளம் உருவாக்கவேண்டும் என்று தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
வரைபடத்தில் கே.பி. கேசவ மேனன் கொடுத்த பகுதிகளையெல்லாம் ஆய்வு செய்த மொழிவழி பிரிவினை குழு அதிர்ச்சியில் உறைந்தது. கே. எம். பணிக்கருக்கோ கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.
நடக்கிறதோ நடக்கவில்லையே அது இரண்டாவது...
ஆனால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு கமிட்டியிடம், இந்தப் பகுதிகளை யெல்லாம் ஒருங்கிணைத்து, புதிதாக உருவாக இருக்கும் எங்கள் மாநிலத்தோடு சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கின்ற தைரியம் அன்றைக்கு தமிழகத்தில் ஓரிருவரை தவிர எவருக்கும் இல்லை...
1954 இல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த மலையாளியான கே.எம்.சீதி சாகிப்,,,ஐக்கிய கேரளத்திற்கான தேவை குறித்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரை...
ஆனால் அன்றைக்கு சென்னை மாகாணத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தது. ஆனால் மறந்தும் கூட தமிழ் நிலத்துக்கான ஆதரவு குரலை அவர்கள் எங்கினும் எழுப்பவில்லை...
அதற்கு காரணம் கேரளாவின் மலபார் மண்டலத்தில் பெருவாரியாக குவிந்து கிடந்த இஸ்லாமியர்கள்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமையிடமே மலபார் என்பதால் தமிழகத்தின் முஸ்லிம்லீக் தலைவர்களால் என்ன செய்துவிட முடியும்.
கேரள காமுதி, மலையாள மனோரமா, மாத்ருபூமி, தேசாபிமானி ஆகிய நான்கு நாளிதழ்களும், ஐக்கிய கேரளத்தின் தேவை குறித்து, அனுதினமும் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து மலையாள நாடெங்கும் பரப்பியது.
திருவிதாங்கூர்- கொச்சி- மலபார் என்று வட்டார ரீதியாக பிரிந்து கிடந்த மலையாளிகளை ஒன்றிணைத்ததில், இந்த பத்திரிகைகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
ஆனால் தமிழகத்தின் நிலையோ வேறு...
தந்தை பெரியார் ஆதரவு நிலையில் தினத்தந்தி இருந்ததால்... பெரிய அளவிற்கு மொழிவழி பிரிவினை செய்திகளை போட முடியவில்லை...
எல்லை போராட்டத்திற்கென்றே உருவாக்கப்பட்ட தினமலர் மட்டும் தென் எல்லை ப் போராட்டத்தை விரிவாக எழுதிக் கொண்டிருந்தது...
மேலாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆத்திக- நாத்திக போராட்டம் தமிழகமெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,,,
மொழிவழி பிரிவினையை பற்றி பேசுவதற்கோ,,, தமிழர் நிலங்கள் பறிபோகிறதே என்று கவலைப்படுவதற்கோ யாருக்கும் நேரமில்லை...இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் கடைப்பிடிக்கும் சமூக விலக்கத்தை, அன்றே கடைப்பிடித்திருக்கிறார்கள் எம் தமிழ் மக்கள்.
மொழி வழியாக மலையாள நாட்டை அமைப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தலைவர்களுடைய பட்டியல் கேரளாவில் அதிகமதிகம்...
குட்டிகிருஷ்ண மாரார்,
என். வி. கிருஷ்ண வாரியர்,
எம் பி முகமது ,
சி.பி. ஸ்ரீதரன் ,
எம்.பி, தேவன்
கே.சி.கொடுங்கல்லூர் என பட்டியல் நீளம்...
ஆனால் தமிழ் நில ஒருமைப்பாட்டிற்காக களத்தில் நின்ற தலைவர்களின் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...
இதே மண்ணில் பிறந்து,
இதே மண்ணில் விளைகிற உணவுப்பொருள்களை உண்டு,
இந்த மண்ணில் ஓடுகிற ஆறுகளில் குளித்து, வளர்ந்து...
இந்த மண்ணில் நிலைகொண்ட பண்பாட்டு கலாச்சாரங்களில் பங்கெடுத்து,
இந்த மண்ணில் காலங்காலமாய் பேசப்படும் மொழியை பேசி... கடைசியில் இந்த மண்ணுக்கே செய்யும் துரோகம் என்பது பெற்ற தாய்க்கு செய்யும் துரோகத்தை விட மேலானது...
1955 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி,பசல் அலி தலைமையிலான மொழிவழி பிரிவினை கமிட்டி தன்னுடைய அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது...
வஞ்சகம்,
நயவஞ்சகம்,
துரோகம் ,
ஏமாற்று வித்தை,
கூட இருந்தே குழி பறித்தல்,
காட்டிக் கொடுத்தல் என அத்தனை தீமைகளையும் ஒரு இனத்திற்கு எதிராக ஏவிவிட்டு, கவனமாய் தங்கள் கணக்குகளை தீர்த்துக் கொண்டார்கள் நயவஞ்சகர்கள்...
யார் அவர்கள்...?
வரலாறு நீளும்.....
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக