தமிழர் இழந்த நிலம்-17
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
மொழி வழியாக தங்கள் மாநிலத்தை உருவாக்க, கேரளத்து தலைவர்களும், சாதிச் சங்கங்களும், கட்சிகளும், பத்திரிகைகளும் கங்கணம் கட்டி நின்ற நிலையில்....
தமிழகத்தில் பெருத்த அமைதி நிலவியது...
தங்கள் மொழியைக் காக்க, உலகத்திலேயே முதல் முதலாக உயிரீகம் செய்த ஒரு இனம்... அந்த மொழி அடிப்படையில் உருவான தாய்த் தமிழகத்தை காப்பதிலே தோற்றுவிட்டது.
மொழிவழி பிரிவினை குழுவின் உறுப்பினரான கே.எம். பணிக்கர், தமிழகத்திற்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளை முற்றுமுழுதாக நம்பியது கமிஷன்...
ஓரளவு நியாயவான் என்று நாம் நம்பியிருந்த குழுவின் தலைவரான நீதியரசர் பசல் அலியும், பணிக்கரின் மாயா ஜாலத்தில் காணாமல் போயிருந்தார்...
உலகம் தோன்றிய நாள்முதல், 1886 வரை திருவிதாங்கூர் கொச்சி மாநிலங்கள், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு ஒருபோதும் உரிமை கோரியது இல்லை என்கிற உண்மையை, திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் பிரதிநிதிகள் மூலமாக தெரிந்தும், பசல் அலி கவனமாக அதைப் புறந்தள்ளினார்.
மூணாறு என்றொரு குளிர் பிரதேசத்தில், தேயிலை பயிரிடுவதற்காக, பிரிட்டிஷ் வியாபார சர் தாமஸ் மன்றோ என்பவர் உடன்பாடு செய்து கொண்டது... திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களிடமல்ல,,, பாண்டிய மரபைச் சேர்ந்த பூஞ்ஞார் மன்னரிடம் தான் என்கிற திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசின் பிரதிநிதிகளால், முன்னெடுக்கப்பட்ட எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை திருவாளர் பசல் அலி...
மாறாக தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் கே.எம்.பணிக்கர் மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் வைத்த அத்தனை கூற்றுக்களையும் உண்மை என்று நம்பினார் திரு பசல் அலி.
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் முறையே,,,
72 விழுக்காடு தமிழர்கள் தேவிகுளத்திலும்...
44 விழுக்காடு தமிழர்கள் பீர்மேட்டிலும்...என திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக...
ஐயகோ...திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் பிரதிநிதிகள் முன்மொழியும் இந்தக் கணக்கு முற்றிலும் தவறானதாகும்...
உள்ளபடியே தேவிகுளத்தில் 46 விழுக்காடு தமிழ் தோட்டத் தொழிலாளர்களும்...
பீர்மேட்டில் 30 விழுக்காடு தமிழ் தோட்டத் தொழிலாளர்களும்...
அனுதினமும் கூலிகளாக தமிழகத்திலிருந்து தேவிகுளம்- பீர்மேடு பகுதிகளுக்கு வந்து போகிறவர்கள் என்று கொக்கரித்தது பிரஜா சோஷலிஸ்ட் கட்சி.
அப்படியானால் தேவிகுளத்தில் 26 விழுக்காடு தமிழர்களும்... பீர்மேட்டில் 14 விழுக்காடு தமிழர்களும் மட்டுமே, நிலையாக அங்கு வாழ்பவர்கள் என்கிற கணக்குக்கு வந்தது பசல் அலி தலைமையிலான மொழிவழி பிரிவினை மோசடி கமிட்டி.
உலகத்தில் இதைவிட அயோக்கியத்தனம் ஒன்று நடந்திருக்க முடியுமோ...
திருவிதாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து... தேவிகுளம் பீர்மேட்டுக்கு, அவர்கள் மாநிலத்தின் வழியே சாலையே இல்லாத நிலையிலும் கூட,,, மலையாளிகளுக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது, தமிழகத்தில் அன்றைக்கிருந்த சில தலைவர்கள்தான்.
கோட்டயத்திலிருந்து பாம்பாடி,
பொன்குன்னம்,
காஞ்சிரப்பள்ளி,
முண்டக்காயம் வரைதான் அன்றைக்கு சாலையே இருந்தது.
முண்டக்காயத்திலிருந்து குட்டிக்கானம்வரை முழுக்க வனப்பகுதி... 1949 வரை இந்த பகுதி வழியாக எந்த சாலையும் பீர்மேட்டை இணைக்கவில்லை. அப்படி கோட்டயத்திற்கும்-பீர்மேட்டிற்குமிடையே இணைப்பு சாலை இருந்ததாக, எவரேனும் சொன்னார் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் அதுதான்....
அதுபோல குமுளியிலிருந்து, உடும்பஞ்சோலை, நெடுங்கண்டம், சாந்தம்பாறை, பூப்பாறை... வழியாக மூணாறு செல்லும் சாலையும் 1950 வரை போடப்படவில்லை.
திருவனந்தபுரத்திலிருந்து நேரடியாக, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை இல்லாத நிலையில், நெடுமங்காடு, பாலோடு, குளத்துப்புழா, ஆரியங்காவு வழியாக செங்கோட்டை வந்து, இங்கிருந்து ராஜபாளையம், உசிலம்பட்டி, தேனி, உத்தமபாளையம் வழியாக கம்பத்திற்கு சென்று... அங்கிருந்துதான் கூடலூர் வழியாக குமுளியை அடையமுடியும்.
பின்னர் குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு, அங்கிருந்துதான் பீர்மேட்டுக்கு செல்ல முடியும்.
அதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் ஒரு மலையாளி, நெடுங்கண்டம், உடும்பஞ்சோலைக்கு செல்லவேண்டுமானால்...கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக, கூட்டாறு, தூக்கு பாலம் வழியாக நெடுங்கண்டத்திற்கு சென்று அங்கிருந்து பாறத்தோடு,மயிலாடும்பாறை வழியாகத்தான் உடும்பஞ்சோலையை அடைய முடியும்...
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அன்றைக்கு வண்டிப்பெரியாறு,
தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில், தமிழர்களின் எண்ணிக்கை 53.29 ஆகும்.
தமிழகத்தின் வழியாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமல்லாது, அந்தப் பகுதிகளின் மலைவளத்தை அறிந்த
மலையாளிகள், சாலை வழியாக எந்த தொடர்புமற்ற நிலையிலும் கூட, உரிமை கோரியதோடு, அதை நயவஞ்சகமாக இணைத்துக்கொண்டது என்பதுதான் வரலாற்றில் பெரும் துயராக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
திருவிதாங்கூர் கொச்சி மாகாண சட்டமன்றத்தில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். நடராஜ பிள்ளை பேசியதை கீழே தருகிறேன். அதன் உண்மை தன்மையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்...
"தேவிகுளம் பீர்மேடு தாலுகாவில் பெருவாரியாக வசிக்கும் ஊராளிகள், மலப்பண்டாரம்,மலவேலன் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் அத்தனை பேரும் மலையாளமே பேசுகிறார்கள்...இவர்கள்தான் மேற்கண்ட இரண்டு தாலுகாக்களிலும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவே தேவிகுளம் பீர்மேட்டை கேரளாவோடு இணைப்பதுதான் சரியாக இருக்கும்""
இதற்கு பதிலடி கொடுத்த திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான டேனியல் அவர்கள்...
"மாண்புமிகு உறுப்பினர் பி.எஸ். நடராஜ பிள்ளை பேசியபடி, மேற்கண்ட ஆதிவாசி மக்கள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் எத்தனை விழுக்காடு வாழ்கிறார்கள் என்கிற கணக்கை தரமுடியுமா"
என்று கேட்டதும், ஒட்டுமொத்தமாக இருந்த அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மலையாளம் உறுப்பினர்கள் சட்டமன்றத்தையே முடக்கும் அளவுக்கு போனார்கள்.
அன்றைக்கு திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில், தமிழர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் 7 பேர் மட்டும்தான் என்பதால் அதைத் தாண்டி நம்மவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை...
தேவிகுளம் பீர்மேட்டுக்காக இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்...
இங்கே ஒரு கூட்டம்...
கடவுள் இல்லை
கடவுள் இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று கத்திக்கொண்டு திரிந்தது...
இவர்கள்தான் கேரளா கர்நாடகா ஆந்திராவை உள்ளடக்கிய திராவிட நாடு கேட்டு முன்னொருகாலத்தில் களத்தில் நின்றவர்கள்...
நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது...
இந்த தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்கும் விடயத்திலேயே, அத்தனை அரசியல் செய்தார்களென்றால்...
ஒருவேளை திராவிட நாடு சாத்தியமாகி இருக்குமென்றால்...
இந்தப்பாண்டிகளின் நிலை அந்தோ பரிதாபம்...
வரலாறு நீளும்...
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக