தமிழர் இழந்த நிலம்-24
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
ஒருவேளை பெரியார் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருந்தால்கூட, நிலைமை மாறி இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.
கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்து பழகிப்போன பெரியார்,அண்ணா மீதுகொண்ட துவேசத்தினாலும், ம பொ சி மீதுகொண்ட எரிச்சலினாலும், மார்ஷல் நேசமணியின் வளர்ச்சி மீது கொண்ட வெறுப்பினாலும்...
குளமாவது மேடாவது என்கிற வசனத்தை பெருந்தலைவர் காமராஜருக்கு எழுதிக்கொடுத்தார்...
இன்னொரு புறத்திலே காமராஜர் மீது பெரு வன்மம் கொண்டிருந்த ராஜாஜியுடன் கொஞ்சியும் குலவினார்...
எந்தத் திசையிலிருந்து நோக்கினாலும் எப்படிக் கருணாநிதியை கணிக்க முடியாதோ, அதைப் போல ஆயிரம் மடங்கு நம்மால் கணிக்க முடியாதவர் பெரியார்.
தேவிகுளம் என்கிற ஊர் போனதால் நாம் இழந்த செல்வத்தை நேற்று பார்த்தோம்...
இன்று பீர்மேடு என்கிற ஊர் போனதால் வந்த வினையை பார்க்கலாம்...
பீர்முகமது என்கிற சூஃபி ஞானி ஒருவர்
எங்கிருந்தோ வந்து இன்றைய பீர்மேடு பகுதிகளில் தனித்து தவம் புரிந்ததாகவும், அவரது பெயரின் நினைவாகவே அது பீர்மேடு என்று அழைக்கப்பட்டதாகவுமான கதையை,
பீரமேட்டின் கதையை எழுதிய ஜார்ஜ் தெங்குமூட்டில் என்கிற மலையாளி எழுதிவைத்துவிட்டு போய்விட்டார்.
ஆனால் உள்ளபடியே பெரியகருப்பன் என்கிற தென்னாட்டுத் தமிழன் ஒருவன், முதல் முதலாக நுழைந்த வனப்பகுதி அது என்பதால்,,, ஆரம்பத்தில் அது பெரியகருப்பன் மேடாகவும், பின்னர் அதுவே மருவி பெரிய மேடாகி, இறுதியில் இன்று பீர்மேடாகி நிற்கிறது.
தவம் புரிவதை இஸ்லாம் தவறு என்கிறது. துறவறத்திற்கு அங்கு வேலையே கிடையாது.பிறகு எந்த அடிப்படையில் பீர்முகமது என்கிற சூஃபி ஞானி பெரியகருப்பன் மேட்டிற்கு வந்து தவம் புரிந்தார்.
இதைக் கேட்டால் மலையாளிகளிடத்தில் எந்த பதிலும் இல்லை.
அவர்கள் பீர்முகமது மேடு என்கிறார்கள்... நாம் பெரியகருப்பன் மேடு என்கிறோம்...
உள்ளபடியே ஏழு பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய பீர்மேடு தாலுகாவில்...
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் விட்டால், கண்டிப்பாக தமிழர்கள்தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள். ஆனால் கேட்பதற்கு நாதி இல்லை என்பதால், ஏதோ ஒரு புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு பீர்மேட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தேயிலை
ஏலக்காய்
காபி
மிளகு
இஞ்சி
கிராம்பு +சுற்றுலா என பீர்மேடு தாலுகா,,, ஏகமாய் செழித்துக்கிடக்கிறது.
ஏ வி டி
ஹெச் எம் எல்
டாடா
போப்ஸ்
கன்னிமரா போன்ற தனியார் தேயிலைத் தோட்ட முதலாளிகள் கொடிகட்டி பறக்கிறார்கள்...
ஏலப்பாறை
கோக்கயார்
குமுளி
மஞ்சுமலை
மைப்பாறை
வண்டிப் பெரியாறு
பெருவந்தானம்
உப்புத்துறை
வாகமன்
குட்டிக்கானம்...என இன்று உயிர்ப்போடு இருக்கும் பெரிய கிராமங்களில், 60 விழுக்காடு நிரவிக்கிடக்கிறார்கள் தமிழர்கள்...
இதில் நான் மேலே குறிப்பிட்டிருக்கும் பெருவந்தானம் கிராமத்தில் மட்டும் தமிழர்கள் இல்லை...
மற்ற எல்லாக் கிராமங்களும் தமிழர்களுடைய நூற்றாண்டு உழைப்பில் உருவாகிக் கிடப்பவைதான்.
தென்னகத்து ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் வாகமன் கிராமத்தில் கூட 65 விழுக்காடு தமிழர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விக்கிபீடியாவில் பீர்மேடு தாலுகாவை நீங்கள் தேடினால்,
தமிழர்கள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்த மஞ்சுமலை ஊரின் பேச்சு மொழி-ஆங்கிலம் மற்றும் மலையாளம் என்று காண்பிக்கும்.
நிலத்தைத்தான் தக்க சமயத்தில் திருடினார்கள் என்றால், வரலாற்றையும் இப்படி அப்பட்டமாக திருடுகிறார்களே இந்த மலையாளிகள் என்று கேட்க ஆளில்லை.
உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.இந்திய அளவில் தேவிகுளம் பீர்மேடு தாலுகாவில் பணிசெய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மட்டும் 42 விழுக்காடு.
தேவிகுளத்திலாவது ஓரளவு தாக்குப்பிடித்து விட்ட தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளால், பீர்மேட்டில் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் தொடர்ச்சியாக நெருக்கியடித்து வரும் மலையாளக் குடியேற்றங்கள்.
இன்னொருபுறம் 30 விழுக்காடு கதவடைப்பு செய்துவிட்ட, தேயிலை கம்பெனி முதலாளிகளால், வாழ்விழந்த தமிழ் தொழிலாளிகள், வாழ வழியற்று, மின்சாரமும், தண்ணீரும் துண்டிக்கப்பட்ட நிலையில், அநாதரவாய் விடப்பட்டு, ஏதிலிகளாக தமிழகம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பீர்மேடு தாலுகாவிலிருந்து தமிழகம் நோக்கி அகதிகளாக வந்த தமிழர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டும்.
சர்வதேச சந்தையில் தேயிலைக்கு விலை இல்லை என்கிற சொத்தை காரணத்தை காண்பித்து,,, படிப்படியாக தமிழர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது அரசு.
அவர்களுடைய நோக்கம், பீர்மேடு தேவிகுளம் தாலுகாக்களை முழுக்க முழுக்க சுற்றுலா மையமாக்க வேண்டும் என்பது மட்டுமே... அதற்காகத்தான் கதவடைப்பு, அதற்காகத்தான் மலையாள குடியேற்றங்கள்...
முண்டக்காயத்திலிருந்து குட்டிகானம்வரை பரந்து விரிந்து கிடக்கும் வனத்திற்குள், எந்த ஆண்டு மலையாளிகள் உள்ளே வந்தார்கள் என்கிற கேள்வியை,
பீர்மேடு சட்டமன்ற உறுப்பினரான திருமதி பிஜுமோளிடமே விட்டு விடுவோம்... பதில் இருக்கிறதா...?
இந்த வாய்ச்சவடால் கும்பல்கள்தான், ஜார்ஜ் தெங்குமூட்டிலை தூண்டிவிட்டு பீர்மேட்டுக்கு வரலாறு எழுதச் சொன்னவர்கள்...
எஸ்.ஆர்.தேவர் ஆகிய நான், பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன்.
அந்தப் பாண்டிய நாட்டு பங்காளிகளில் ஒருவர்தான் பூஞ்ஞார் சமஸ்தானத்தின் அரசன்...அந்தப் பூஞ்சார் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்டு கிடந்தது தான் இன்றைய கோட்டயம் ஈராட்டுப்பேட்டை,பாலா, முண்டகாயம், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, தேவிகுளம் உள்ளிட்டவைகள்...
ஆனால் இன்றைக்கு அதை என்னால் பேச முடியவில்லை.எங்கிருந்தோ வந்தவர்கள் எங்கள் வரலாற்றை தொலைத்ததால், எங்களுடைய நிலம் இன்றைக்கு எங்களுடைய கையை விட்டுப் போய்விட்டது.
பீர்மேடு தாலுகா மட்டும் தேனி மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக மாறி இருக்கும் என்றால்...
வருடம் முழுவதும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு, தொல்லை ஏதும் இன்றி இராமநாதபுரத்தின் பெரிய கண்மாயை அடைந்திருக்கும். கம்பம் பள்ளத்தாக்கில் முப்போகமும், சோழவந்தான் மதுரை மேலூர் வரை இரண்டு போகமும், மேலூருக்கு கிழக்கே ஒரு போகமும்
விளைந்து, வேலிக்கருவைக்கு வேலை இல்லாது போயிருக்கும்... கிட்டத்தட்ட 2,40,000 ஏக்கர்கள் நிரந்தர பாசன வசதி பெற்றிருக்கும்.
பெரியார் கைவிரித்ததனால் பெரியாறு இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது...
தூக்கு பாலம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் கல்லாறை கிழக்கு நோக்கி திருப்பி இருந்தால், ஆண்டுக்கு 16 டிஎம்சி தண்ணீர் தமிழகத்தை வந்தடைந்திருக்கும்...
வாகமன்
பாஞ்சாலிமேடு
கெவி
பருந்தும்பாறை
மொட்டக்குன்னு
ராமக்கல்மெட்டு
அம்மாச்சி கொட்டாரம்
வலஞ்சானம் அருவி
தேக்கடி,
பெரியாறு புலிகள் காப்பகம்,,,என சுற்றுலா மூலமாக மட்டும் ஆண்டுக்கு 500 லிருந்து 600 கோடிகள் தமிழகத்தை வந்தடைந்திருக்கும்.
கதவடைப்பு செய்த தேயிலைத் தோட்டங்களை கைமாற்றி, நாமும் ஆயிரக்கணக்கான தமிழர்களை அங்கே குடியமர்த்தி இருக்க முடியும்.
வண்டிப்பெரியாறு சப்பாத்து
வல்லக்கடவு வழியாக
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் புல்மேடு பாதையை மட்டும் செப்பனிட்டால் ஆண்டொன்றிற்கு வருமானம் 100 கோடியைத் தாண்டும்.
குமுளி சோதனைச் சாவடியில் மட்டும் வர்த்தக வாகனங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டு ஒன்றிற்கு 14 கோடிகள்...
தேக்கடியில் படகு குழாம் மூலமாக கிடைக்கும் வருவாய் மட்டும் ஆண்டொன்றுக்கு 74 கோடி ரூபாய்...
இதுபோக மிளகு, கிராம்பு, இஞ்சி, தேயிலை, காப்பி ஆகியவைகளின் ஏற்றுமதி மூலம் மட்டும் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டொன்றிற்கு 240 கோடியை தாண்டுகிறது.
பீர்மேடு தாலுகாவில் வண்டிப்பெரியாறு வரை ஓடக்கூடிய சிற்றோடைகளை, எளிதாக ஒரு சிறிய பம்பிங் மூலம் தேக்கடிக்கு கொண்டு வந்து சேர்க்க முடியும்.
எல்லாமும் இன்றைக்கு போய்விட்டது... எப்படி அல்லது எப்போது மீட்பது...
தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாவின் மூலமாக கேரள அரசு பெரும் ஆண்டு வருவாய் 11.5 விழுக்காடு என்பதை மறந்து விடாதீர்கள்... அதாவது மொத்த வருவாயில்...
இந்தத் துரோகத்தை எப்படி மறப்பது...?
வரலாறு நீளும்...
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக