தமிழர் இழந்த நிலம்-12
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
தமிழ் நிலம் எப்படி அமைய வேண்டும்,
தமிழகத்திற்கு உரிமையான பகுதிகள் எவை,
பறிபோகவிருக்கும் தமிழர் நிலத்தை எப்படி மீட்பது,
மொழிவழிப் பிரிவினை குழுவை எப்படி எதிர்கொள்வது,
என்று... அன்று எழுந்துநின்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு தமிழ் நிலத்தில் பெரிய அளவிற்கு, விடை கிடைக்கவில்லை என்பதுதான் நமக்கான பெரும் பின்னடைவு.
வடக்கு எல்லையில் ம.பொ.சியும்,மங்கலங்கிளார் உள்ளிட்ட போராளிகளும்...
தெற்கு எல்லையில் மார்ஷல் நேசமணி, சிதம்பரநாதன்,அப்துல் ரசாக் உள்ளிட்ட போராளிகள் மட்டும் இல்லையென்றால்...
ஏற்கனவே நம்மிடம் இருந்து தட்டிப்பறித்த ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டரை போல, இன்னொரு ஆயிரத்து 400 சதுர கிலோமீட்டர் களையும் மலையாளிகள் பறித்திருக்கக் கூடும்...
"ஐக்கிய கேரளம்" எனும் ஒற்றைச் சொல்லுக்கு பின்னால், ஒட்டுமொத்த கேரளமும் அணி திரண்டு நின்றது...
புதிய கேரளத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் மலையாளிகளுக்கு இருந்த அக்கறை, தமிழகத்தில் பெரிய அளவிற்கு எந்த அரசியல்வாதியிடமும் இல்லையென்று குற்றஞ்சாட்டுகிறேன்.
காங்கிரஸ்,
கம்யூனிஸ்டுகள்,
பிரஜா சோசலிஸ்ட் கட்சி,
ஆர் எஸ் பி,
முஸ்லிம் லீக்,
கத்தோலிக்க காங்கிரஸ்...என அன்றைக்கு கேரளத்தில் இருந்த அத்தனை கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று, தங்களுடைய நிலத்தை கட்டமைப்பதற்கு களம் கண்டார்கள்.
இவர்களோடு களத்தில் நின்று நம்மை ஆச்சரியப்படுத்திய இரண்டு பெரிய அமைப்புகளான...
1914 ல் உருவாக்கப்பட்ட
N S S-Nair Service Society ம்,
1903 ல் உருவாக்கப்பட்ட
S N D P- Sri Narayana guru Dharma paripalana Sangham ம்,
இன்றளவும் கேரளாவில் செல்வாக்குச் செலுத்தும் இரண்டு பெரிய சாதி அமைப்புகளாகும்.
புதிதாக அமையவிருக்கக்கூடிய ஐக்கிய கேரளத்தில், தங்கள் செல்வாக்கை தக்க வைப்பதற்காகவே, மேற்கண்ட இரண்டு சாதி அமைப்புகளும் களத்தில் நின்றது.
கொடுமை என்னவென்றால், ஜாதி இல்லை, மதம் இல்லை என்று கங்கணம் கட்டி களத்தில் நின்ற கம்யூனிஸ்டுகளோடு, இவர்களும் கரங்கோர்த்து நின்றார்கள் என்பதுதான்.
எதிரும் புதிருமாக நின்ற இவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து... தங்களுக்கான நாட்டைக்காண கனவு கண்டபோது, தமிழகத்தில் மட்டும் எவ்வித சலசலப்புமின்றி, அவரவர்... அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணாதுரை வந்தால் நான் வரமாட்டேன்... என்று தந்தை பெரியாரும்...
காமராஜ் வந்தால் நான் வரமாட்டேன் என்று மூதறிஞர் ராஜாஜியும்...
சித்தன் போக்கு சிவன் போக்கு என்று... அவரவர் வேலையை பார்த்ததால், 1400 சதுர கிலோமீட்டர்களை, கேரளாவிடம் அநியாயமாய் இழந்தோம்.
அன்றைக்கு தேவி குளத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 72 விழுக்காடு...
பீர்மேட்டில் தமிழர்களின் எண்ணிக்கை 44 விழுக்காடு (இது போலி கணக்கு என்பதை பின்நாட்களில் நிறுவுகிறேன்) என இருந்தும்,
மொழிவழி பிரிவினைக் கமிட்டியின் விதிகளுக்கு புறம்பாக,தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் வாழக்கூடிய தமிழர்களின் இந்த எண்ணிக்கையை, வந்து போகக்கூடிய (Floating Labour) கூலிகள் என்பதை, கமிட்டி விவாதத்தில் அசாதாரணமாக நிறுவியதோடு, அந்த நிலத்தை தட்டிப்பறிக்கவும் காரணமாக இருந்த கே-எம் பணிக்கரை,வரலாறு மன்னிக்கலாம். ஆனால் தமிழ் நிலத்தில் பிறந்த, இனி பிறக்கப் போகிற உணர்வுள்ள தமிழர்கள் எவராலும், ஒரு போதும் மன்னிக்க முடியாது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும், செங்கல்பட்டு பகுதியில் இருந்தும், குமரி மாவட்டத்தில் இருந்தும் கால்நடையாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள்...ஒவ்வொருநாளும் வேலையை முடித்துவிட்டு, திரும்ப ஊருக்கு சென்று சேர்ந்து, அங்கிருந்து மறுநாள் பணிக்கு எப்படி இங்கு வரமுடியும் என்று கேட்பதற்கு, ஆளரவமின்றி போனதால், பணிக்கர் வென்றார், பாண்டியநாடு தோற்றது.
தேசாபிமானி, மாத்ருபூமி, கேரளா காமுதி,
மலையாள மனோரமா உள்ளிட்ட அத்தனை மலையாளப் பத்திரிகைகளும், ஐக்கிய கேரளத்தை உருவாக்க தமிழர் நிலத்தை தட்டிப்பறிக்க முனைந்த போது, எங்கே போனது தமிழ்நிலத்து பத்திரிகைகள்.
ஒரு ஆறுதலான விடயம் என்னவென்றால் தினமலர் மட்டும் தென் எல்லை போராட்டத்தில் பிரதான பங்கு வகித்தது.
பெரியார் திடலில் இருந்து வந்த விடுதலை... தேவிகுளம் பீர்மேடு குறித்து எழுதி எழுதி நிறைய பேப்பர்களை காலி செய்ததே தவிர, உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
ஐக்கிய கேரளத்திற்காக அணிவகுத்து நின்ற... ஒட்டுமொத்த மலையாள அரசியல் உலகம், சாதி சங்கங்கள், மதவெறி கட்சிகள், காட்டிக் கொடுக்காத தலைவர்கள் உள்ளடங்கிய தன்னேரில்லா அணி முன்னத்தி ஏராக சால் காட்டியபோது...
திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசும்...
தமிழரசு கழகமும் மட்டும்...
முண்டா தட்டி களத்தில் நின்றது...
மராட்டிய மாநிலத்திற்கு சொந்தமான பெல்காம் பகுதியை, இதே மொழிவழி பிரிவினை கமிட்டி, கர்நாடகாவோடு இணைத்த அயோக்கியத்தனத்திற்கெதிராக, இன்றளவும் பெல்காம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பெல்காம் என்கிற பெயரை பெலகாவி என்று மாற்றியதோடு, கர்நாடக சட்டமன்றமான விதான் சுதாவின்,துணை சட்டமன்றத்தை பெல்காம் நகரில் கட்டியமைத்து, அது தங்கள் பகுதி என்று நிறுவுவதற்கு கன்னட வெறியர்கள் எத்தனையோ முயற்சி எடுத்தும், பெல்காம் இன்னும் அடங்கவில்லை.
திடீர் திடீரென "மராட்டிய மாநிலம் உங்களை அன்போடு வரவேற்கிறது" என்ற மராத்திய மொழியில் பதாகைகளை அச்சிட்டு, பெல்காம் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் வைத்துக்கொண்டிருக்கிறது உணர்வுள்ள ஒரு மராத்தியக் கூட்டம்.
அந்த நிலை இன்றைக்கு தேவிகுளம் பீர்மேட்டில் இல்லையே என்கிற ஏக்கமும் என்னை வாட்டுகிறது...
மொழிவழி பிரிவினை கமிட்டி என்ன செய்து கொண்டிருக்கிறது, என்பதை கேரளா முழுவதும் கொண்டு சேர்த்தன அன்றைக்கிருந்த அத்தனை கேரள முன்னணி பத்திரிக்கைகளும்.
நாம் அதிலும் பின் தங்கினோம்...
கூடுதலாக ஒவ்வொரு கட்சியும் ஐக்கிய கேரளத்தின் தேவையை வலியுறுத்தி ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தது...
ஐக்கிய கேரளம் உருவாகும் வரை, மலபார் மண்டலத்திலிருந்து, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட அகாடமிகள் நடத்தும், எந்தக் கலாச்சார நிகழ்விலும் மலையாளிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று பொது அறிக்கை விட்டது ஐக்கிய கேரள கமிட்டி.
அதைவிட பிரபல முன்னணி நாளிதழான மாத்ருபூமி அலுவலகத்தில்,ஒரு எளிய தலைவராக அறியப்பட்ட கே.பி. கேசவ மேனன் தலைமையில் நடந்த ஐக்கிய கேரள கூட்டத்தில், அந்த மாநில முதல்வராக இருந்த திரு பனம்பள்ளி கலந்து கொண்டார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
இந்த நிலை தமிழகத்தில் இல்லாது போனதற்கு காரணம்,அன்றைக்கு நீக்கமற நிலைகொண்டிருந்த திராவிடம் என்பது தான் நிதர்சனமான உண்மை.
கூடுதலாக அன்றைக்கு நமக்கு கிடைத்த முதல்வரும், தேவிகுளம் பீர்மேடு விடயத்தில் தொடர்ந்து பாராமுகம் காட்டியதால் அத்தனை பெரிய பின்னடைவுக்கு தமிழகம் சென்றது.
தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் மலையாளிகள் வைத்த நிபந்தனையை நாம் திருச்சூர் மாவட்டத்தில் அன்றைக்கிருந்த சித்தூர் தாலுகாவிற்கு முன்வைத்தபோது மிக கவனமாக நிராகரித்தது மொழிவழி பிரிவினை கமிட்டி...
ஆயிரம் முறை கழுவிலேற்றினாலும் பணிக்கரை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது தமிழ்ச்சமூகம்...
நாளை தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் இந்தத் தமிழ் நிலத்திற்கு செய்த துரோகங்களை பட்டியலிடுவோம்...
துரோகம் தொடரும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக