திங்கள், 22 ஜூன், 2020

அயற்சொல் அகராதி (பாகம் 2)

ப.அருளியாரின் அயற்சொல் அகராதி (பாகம் 1) நூலிலிருந்து,


501. இலக்சணம் - இலக்கணம்
502. இலட்சம்- இலக்கம், நூறாயிரம்
503  இலட்சாதிபதி-இலக்கத் தலைவன்
504.இலட்சியம்-இலக்கியம்,குறி,மதிப்பு
505. இலவங்கம் - கருவமரம், கருவா
506. இலளிதம் - விருப்பம், விழைவு,
                            அவா, பொருட்டெளிவு
507. இலளிதா- மெல்லியல், சிவை
508. இலாகா( அரபி)- துறை, ஆள்புலம்,
                        திணைக்களம், கிளையம்,
                                   அலுவல் வட்டம்
509. இலாவகம் - திறன், நுண்ணுத்தி,
                                               திறவினை
510. இலகிரி வஸ்து (தெலுங்) -
                                                 களிப்பீனி
511. இலாபம் - ஊதியம், பயன்,
                                                 முதலெண்
512. இலாமிச்சை - எலுமிச்சை,எற்பழம்
513. இலாமிச்சை- மண வேர்ப்புல்,
                  வெறிவேர்ப்புல், வெட்டிவேர்
514. இலாவண்யா- அழகு
515. இலிபி(libi)- எழுத்து, ஊழ்
516. இலீலை(lila)- ஏகடியம், பகடி
517. இன்கம்டாக்ஸ் (ஆங்கி)-
                                            வருமானவரி
518. இன்ச் (ஆங்கி) - விரற்கிடை
519. இன்ச்சார்ஜ் (ஆங்கி)- பொறுப்பு
520. இன்ச்டேப் (ஆங்கி)-   
                                           விரற்கிடைவார்
521. இன்சல்ட் (ஆங்கி) -அவமதிப்பு,
                                    அவமதி, வசைகூறு
522. இன்டர்நேஷனல்(ஆங்கி) -
                                                 பன்னாட்டு
523.இன்டர்மீடியேட்(ஆங்கி)-   
                                                இடைநிலை
524. இன்டர்வியூ(ஆங்கி)- நேர்காணல்
525. இன்ட்லெக்சுவல்(ஆங்கி)-
                                       அறிவுத்திறத்தர்
526. இன்டெக்ஸ்(ஆங்கி)- அடைவு
527. இன்டெலிஜண்ட் (ஆங்கி)-
                                          கூர்மதியுடைய
528. இன்ஃப்ளூயன்ஸா (ஆங்கி)-
                                          சளிக்காய்ச்சல்
529. இன்ஜக்ஷன் (ஆங்கி)- ஊசியீடு
530. இன்ஸ்கர்ட் (ஆங்கி)- இடைஞாலி
531. இன்ஸ்ட்டால்மென்ட் (ஆங்கி)-
                                                   தவணை
532. இன்ஸ்பெக்டர் (ஆங்கி)-
                                        உண்ணோட்டகர்
533. இன்ஸ்பெக்சன்(ஆங்கி)-
                                        உண்ணோட்டகம்
534. இஸ்ஷ்யூரன்ஸ்(ஆங்கி)- ஈட்டுறுதி
535. இனாம் (உருது)- நன்கொடை,
                                                     மாணியம்
536. இனிஷியல் (ஆங்கி)- தொடக்கம்,
                                             சுருக்கொப்பம்
537. இஷ்டம் - விருப்பம், விழைவு,
                                              ஆவல்
538. இஷா (அரபி)- முற்பகுதியிரவு,
                                      இரவுத்தொழுகை
539. இஷ்க்கு(அரபி)- அன்பு, காதல்
540. இஸ்திரி (உருது)- தேய்ப்பம்,
                       தேய்ப்புக்கருவி, வழப்பம்
541. இஸ்லாம் (அரபி)- அமைதி
542. இம்சை (himsa)- கொலை,
                         தொல்லை, தொந்தரவு
543. இயரிங் hearing (ஆங்கி)- கேட்சி,
                               வழக்கு கேட்கை
544. ஈசிசேர்(ஆங்கி)- சாயிருக்கை,   
        சாய்கான்மணை, சாய்வு நாற்காலி
545. ஈசன் - இறைவன், சிவன், அரசன்,
                                         குரு, மூத்தோன்
546. ஈசானியம்- வடகீழ்த்திசை
547. ஈத்(அரபி)- பண்டிகை
548. ஈவ்டீசிங்(ஆங்கி)- பெண் -
                                        பகடியுறுத்தம்
549. ஈனசுரம்- தாழ்ந்தகுரல்,
                                           தக்குக்குரல்
550. ஈனம்- இழிவு, குறைபாடு, கீழ்மை,
                                     தாழ்வு, தாழ்கை
551. ஈனம்- சரிவு
552. ஈனன் - இழிந்தோன்
553. ஈஸ்ட் (ஆங்கி)- நொதியம், காடி
554. ஈஸ்வரன் - இறைவன், சிவன்
555. ஈஸ்வரி - இறைவி, சிவை, பரை
556. ஈஸி (ஆங்கி)- எளிய
557. ஈஸிசேர்(ஆங்கி)-  சாய்வு 
                                                 நாற்காலி
558. உக்கா huqqa (உருது)- புகைப்புக்
                                                          குழல்
559. உக்கிர நட்சத்திரம் - கொடுவுடு
560. உக்கிரம்- கொடுமை, கடுமை,
                   உக்கம், உச்சி, தலைக்காவல்
561. உச்சரித்தல் - பலுக்குதல்
562. உச்சரிப்பு - பலுக்கம்
563. உச்சவம் (பிராகி)- விழா,
                                    செழுமை, செழிப்பு
564. உச்சாடனம் - இருப்பிடத்தினின்று
                 ஓட்டுங்கலை, பேயோட்டுகை,
                                               பேயைவுகை
565. உசிதம் - தகுதி, பொருத்தம்,
                                                   மேன்மை
566. உசிதன் - பாண்டியன்
567. உசிப்பித்தல்- சேர்த்தல்
568. உடான்சு (உருது)-
                                       விளையாட்டுரை,
                    போலிப்பொய், பகடிப்பொய்
569. உண்டி (உருது)- மாற்றுத்தாள்,
                       வரைவோலை, காசோலை
570. உத்தம் புருஷன்- மீயாண்,
                                       நற்பண்பாளன்
571. உத்தமம்- மீச்சிறப்பு, மேன்மை,
                                  நற்பண்பு, நன்மை
572. உத்தமன்- மீச்சிறப்பன்,
                    மேன்மையன், நற்பண்பன்
573. உத்தமி- கற்புடையாட்டி, குணத்தி
574. உத்தரக்கிரியை- உத்தரக்கருமம்,
                                      மேற்சடங்கு
575. உத்தரவாதம் - உத்தர வழக்காட்டு,
                          உத்தரவுரைப்பு,
                           பொறுப்பு, பிணை, ஈடு
576. உத்தரவேதம் - உத்தரமறை,
                           உயர்மறை, திருக்குறள்
577. உத்தராயணம் - உத்தரச்செலவு
578. உத்தரீயம்- மேலாடை
579. உத்தவம் - விழா
580. உத்தி ukti- பேச்சு
581. உத்யோகம்- வேலை, அலுவல்,
                                                     முயற்சி
582. உத்யோகன்- அலுவலன்
583. உத்வேகம்- மிகுவிரைவு, அச்சம்,
                                   திருமணம், பாக்கு
584. உத்தேசம் - நோக்கம், கருதுகை,
                          மதிப்பீடு, மதிப்பு, அளவு,
                                        ஏற்றம்-குறைவு
585. உதயசூரியன்- எழுஞாயிறு
586. உதயதாரகை- விடிவெள்ளி
587. உதயம்- தோன்றுகை, உதிப்பு,
                  தோற்றம், புலப்பாடு, எழுகை
588. உதயராகம்- காலைப்பண்,
                       புறநீர்மை, விடியலராகம்
589. உதயன் - கதிரவன், ஞாயிறு
590. உதரம்- வயிறு
591. உதாசினம்- மதியாமை,
            பொருட்படுத்தாச்சொல், இகழ்வு
592. உதார் - வெற்றுவீம்பு,
                   போலிப்பெருமை, அலம்பல்
593. உதாரணம்- எடுத்துக்காட்டு,
                        காட்டு, ஒப்புநோக்குகை,   
                                  சான்று,  ஈடு காட்டல்
594 . உதாரன்- கொடையாளி
595. உதாரி- கொடையாளி,
                    சிறந்தோன், மேம்பட்டவன்
596. உதிரம்- அரத்தம், குருதி
597. உப்பசம் (தெலுங்) - ஈளை, வீக்கம்
598. உப- ஒவ்வ
599.உபகிரகம்- துணைக்கோள்
600. உபகரணம் - துணைக்கருவி
601. உபகாரச் சம்பளம் - ஓய்வூதியம்
602. உபகாரம் - உதவி, கொடை,
                                                     ஒப்புரவு
603. உபகாரம் - காணிக்கை
604. உபகாரம் - மகிழ்ச்சி
605. உபசரணை - பணிவிடை செய்கை
606. உபசரித்தல் -பணிவிடை செய்தல்,
                                       விருந்தோம்புதல்
607. உபசாரம் - மதிப்பளிப்பு,
                    பணிவிடை, விருந்தோம்பல்,
                                       முகமன் கூறுதல்
608.உபசாரம் - பணிவிடை, படையலிடு
609. உபத்திரவம் - தொந்தரவு,
               தொல்லை, இடுக்கண், துன்பம்
610. உபதேசம் - அறிவுரை, நல்லுரை,
                    அறிவளிப்பு, தெளிவுரைப்பு,
                              கற்பிப்பு, பயிற்றுகை
611. உபநதி- துணையாறு
612. உபநயனம் - பூணூல் மாட்டல்
613. உபநிடதம் - அறம், அறப்பண்பு,
                                                கமுக்கம்
614. உபநியாசம் - சொற்பொழிவு
615. உபநிஷதம் -ஓத்து, அடியருகமர்வு,
                       மறைமம்
    upa-அருகு, ni- கீழ்/ அடி, sad-அமர்கை
616.உபமேயம்-உவமையேற்றபொருள்,
                             உவமையேய்வம்
617. உபமை - உவமை
618. உபயோகப்படுத்துதல் -
                                   பயன்படுத்துதல்
619. உபயோகம்- உதவி, பயன்பாடு,
                                    உதவிப்பொருள்
620. உபயோகித்தல்- பயன்படுத்தல்
621. உபவாசம் - உண்ணாநோன்பு
622. உபவேதம் - துணைமறை
623. உபாகமம் - வழித் தோன்றியம்
624. உபாசனை- வழிபாடு
625. உபாத்தியான்-ஆசான், ஆசிரியன்,
                          குரு, பயிற்றுவிப்போன்
626. உபாதை - வலித்துயர், நோய்,
                                               இடையூறு
627. உபாயக்காரன் - ஆம்புடையாளி,
           ஆம்புடைக்காரன், சூழ்ச்சியாளி,
                                         சூழ்ச்சிக்காரன்
628. உபாயதந்திரம் - வஞ்சம்
629. உபாயம் - ஆம்புடை, சூழ்ச்சி
630. உபாயம் - வழிவகை
631. உபேந்திரன் - திருமால்
                              (இந்திரனுக்கு தம்பி)
632. உமா - சிவை
633. உமா - குன்றி
634. உமாபதி - சிவன்
635. உமா மகேஸ்வரன் - சிவன்,
636. உமை - மஞ்சள், புகழ், ஒளி, சணல்
637. உமையவள் - சிவை
638. உயில் (ஆங்கி)- விள்ளாவணம்,
                         ஈற்றாவணம், இறுதிமுறி
639. உருசி(ruci)- ஒளிக்கதிர், ஒளி,
                                                   பிறக்கம்
640. உருசித்தல் - சுவையாதல்,
                        சுவைபார்த்தல், துய்த்தல்
641. உருத்திரபூமி- சுடுகாடு
642. உருத்திரம் - பெருஞ்சினம்
643. உருத்திரன் - சிவன், நெருப்பிறை,
            சிவக்கணத்தோன், சிவக்குமரன்
644. உருத்திரை - சிவை
645. உருது (அரபி)- படை, பாசறை,
                                        பாசறைமொழி
646. உரூப்யா- வெள்ளி
647. உரோகம் (roga)- நோய்
648. உரோகிணி- சகடமீன், சகடம்,
                சிவப்பி, ஆ, கோ, பெருங்குமிழ்
649. உரோமம்- புறமயிர், மயிர்
650. உல்லாசதலம்- முகப்புமாடம்
651. உல்லாசம் - களிப்பு, அகமகிழ்வு,
                                      உவப்பு, உவகை
652. உலகநாதன்- உலகநம்பி
653. உலகப்பிரசித்தி- உலகச் சீர்த்தி,
                                  உலகப்பெரும்புகழ்
654. உலமா (அரபி)- குரு
655.உலுத்தன்-இவறி,கஞ்சன்,இழிஞன்
656. உலுத்தன்- வேட்டுவன், வேடன்
657. உலோகம் loha- மாழை,
                                               மாழைத்தாது
658. உலோகம் loka -உலகம்
659. உலோகாயுதம் - இயங்கியல்,
                            உலங்கியங்கியல்
660. உலோகிதம் lokita- சிவந்தது,
                                        செஞ்சந்தனம்
661. உலோகிதன் - செவ்வாய்
662. உவாத்து Upadh- ஆசிரியன்
663.உற்சவம்-திருவிழா, கொண்டாட்டம்
664.உற்சாகம்-ஊக்கம், ஏக்கெழுச்சி,
             உளவெழுச்சி, முயற்சி, மகிழ்ச்சி
665. உற்பத்தி-  தோற்றம், உருவாக்கம்,
                                         விளைவாக்கம்
666. உற்பவம்- தோற்றம், பிறப்பு, மூலம்
667. உற்பவித்தல்- தோன்றுதல்,
                                                 பிறப்பித்தல்
668. உன்மத்தம்- வெறி, மயக்கம்,
                         பித்துருவாக்குங்கணை,
                                             ஊகமத்தை
669. உன்மத்தன்- பித்தன், வெறியன்
670. உன்னதம்- உயர்ச்சி, உயர்வு,
                                 மேன்மை, பெருமை
671. உஷ்ணம் - வெப்பம், உண்ணம்
672. உஷ்ணமானி- தெறுமமானி
673. உஷா- விடியலி
674. உஷாதேவி- கதிரவன்தேவி,
                               எல்லோன்மனைவி
675. உஷார் (உருது)- கவனம்,
                      எச்சரிக்கை, விழிப்புணர்வு,
                                               அணியம்
676. ஊக்கு (ஆங்கி)- கொக்கி
677. ஊகித்தல்- உன்னித்தல், ஆழ்ந்து
                                                   கருதுதல்
678.ஊகி-நுண்ணறிவன்,
                                       நுண்ணறிவள்
679.ஊட்டி(ஆங்கி)-ஒற்றைக்கல்மந்தை
      Otagamund~Utagamandalam~UT~Ooty
680.ஊதா(உருது)- செந்நீலம்
681. ஊதாரி- மீச்செலவாளி,
        இறைப்பாளி, வீண்செலவுக்காரன்
682. ஊதாரி- பயனிலி
683. ஊர்வசி - பேரெழிலி
684. ஊர்வசி - தேவநடி
                              (நடி-நாட்டியக்காரி)
685.ஊர்ஜிதம்-நிலைப்பாடு,
                                           உறுதிப்பாடு
686. ஊனம் - குறைவு, குற்றம், பழி,
                               தீமை, அழிவு, பிணம்
687.ஊனன்- முடவன், உடற்குறையாளி
688. எக்கச்சக்கம் (தெலுங்)- தாறுமாறு,
                      ஒழுங்கின்மை, இசகுபிசகு,
                                        மிகப் பேராளம்
689.எக்கனாமிக்ஸ்(ஆங்கி)-
                                               பொருளியல்
690. எக்கோ(ஆங்கி)- எதிரொலி
691. எக்சேன்ஜ்(ஆங்கி)- பரிமாற்றம்,
                                                  மாற்றுகை
692. எக்ஸர்சைஸ்(ஆங்கி)- பயிற்சி,
                                             உடற்பயிற்சி
693. எக்செப்ஷன் (ஆங்கி)-
                            நெறிவிலக்கு, புறனடை
694. எக்ஸ்யூஸ் (ஆங்கி)- மன்னி,
                பொறு, மன்னிப்பு, பொறுத்தல்
695. எக்ஸ்ட்ரா (ஆங்கி)- அதிகப்படி,
                                       மேம்படி, கூடுதல்
696. எக்ஸ்டென்ஷன் (ஆங்கி)-
                              விரிவாக்கம், நீட்டிப்பு
697. எக்ஸ்பிரஸ்(ஆங்கி)-
                     விரைவஞ்சல், விரைவான்
698. எக்ஸ்பர்ட் (ஆங்கி)- வல்லுநர்
699. எக்ஸ்பீரியன்ஸ் (ஆங்கி)- பட்டறிவு
700. எக்ஸ்போர்ட் (ஆங்கி)- ஏற்றுமதி
701.எக்ஸ்சர்வீஸ்மேன்-முற்-பணிமகன்,
                                           முற்பணியாளி
702. எக்ஸஸ்- மிகை
703. எக்ஸாமினேஷன் - தேர்வு
704. எக்ஸிக்யூட்டிவ் எஞ்ஜினியர் - 
                  செயற்பொறிஞர்
705. எக்ஸைஸ்- ஆயத்துறை, உல்கு
706.எகத்தாளம்(கன்ன)- கிணடல், பகடி
707. எச்.பி (HP)- ப.தி, பரிதித்திறன்
708.எசமான்- முதலாளி, தலைவன்,
             முதல்வன், வேள்வித்தலைவன்,
                                                 மேலோன்
709. எசுர் வேதம்- வேள்விமறை
710. எஞ்சின் - எந்திரம்
711. எஞ்சினீர்- பொறிஞர்,
                                            பொறியாளர்
712. எட்டாம் துக்கம்- எட்டாம் துயர்
713. எடிட்டர்- பதிப்பர், பதிப்பாசிரியர்
714. எடிட்டிங்- பதிப்பு
715.எடிட்டோரியல்- ஆசிரியவுரை
716. எத்தனம்- முயற்சி, அணியப்பாடு,
                                                      கருவி
717. எத்தனித்தல்- முயற்சித்தல், 
                  முயறல், அணியப்படுத்தல்
718. எதார்த்தம்- உண்மை
719. எதிர்வாதம்- எதிர் வழக்குரை
720. ஏதேச்சாதிகாரம்
                    (யதா+இச்சா+அதிகாரம்)-
                             தன் விருப்ப அதிகாரம்
721. எதேச்சை(யதா+இச்சை)-
      எழுவிழைவு, தன்னியல்பு விருப்பம்
722. எம்.எல்.ஏ- ச.ம.உ(சட்ட
                                  மன்ற உறுப்பினர்)
723. எம்.எஸ்.சி - அறி.மு (அறிவியல்
                                                  முதுவர்)
724. எம்.ஏ - க.மு (கலை முதுவர்)
725. எம்.ஓ - ப.வி (பணவிடை)
726. எம்ட்டி- வெறுமை, பொருளின்மை,
                                              வறிதான
727. எம்ப்ராய்டரி- பூத்தையல்
728. எம்ப்ளம்- வகையக்குறி
729. எம்ப்ளாய்மண்ட்- வேலைவாய்ப்பு,
                                          வேலைப்பணி
730. எம்ப்ளாய்மண்ட் எக்ச்சேன்ஜ்-
                               வேலை வாய்ப்பகம்
731. எம்ப்ளாயி- ஊழியர்
732. எம்பஸி- தூதரகம்
733. எம்ப்போரியம்- மலிகையகம்
734. எம்.பி - நா.உ (நாடாளுமன்ற
                                              உறுப்பினர்)
735. எமகாதகன் - பெருந்திறலாளி,
                            பெருங்கயவாளி,
                             பெருங்கொலைஞன்
736. எமர்ஜென்சி- நெருக்கடி
737. எலக்ட்ரானிக்ஸ்- மின் துகளியல்,
                       மின் துகளகம், மின்னகம்
738.எலாஸ்டிக்- ஞெகிழி,
                                          ஞெகிழிசார்ந்த
739.எலிமண்டரிஸ்கூல்- 
                                         தொடக்கப்பள்ளி
740. எவர்சில்வர்- நிலை வெள்ளி
741. எவிடன்ஸ் - சான்று
742. என்கரேஜ்மண்ட்- ஊக்கப்பாடு
743. என்ட்ரன்ஸ்- நுழைவாயில்
744. என்டர்ட்டெய்ன்மெண்ட் -
              பொழுதுபோக்கு, விருந்தளிப்பு
745. என்டர்ப்ரைஸ்- முனைவகம்
746. என்லார்ஜ் - விரிவடை, விரிவாகு
747. என்.ஜி.ஓ- அ.ப.அ (அரசிதழ்
                            பதிவுறா அலுவலர்)
748. என்.ஸி.ஸி - தே.மா.ப (தேசிய
                                         மாணவர் படை)
749. எனாமல் - பற்சிப்பி, மிளிரி
750. எஸ்கார்ட் - வழி காப்பாளர்
751. எஸ்டிமேட் - மதிப்பீடு
752. எஸ்டேட் - பண்ணைச்சொத்து,
                             பண்ணைத்தோட்டம்
                        உடைமை, சொத்துரிமை
753. எஸ்தர் (எபிரே)- விண்மீன்
754. ஏக்கர் - குறுக்கம்
755. ஏக குரு- உடன் கற்றோன்
756. ஏகத்துவம் - ஒன்றியன்மை,
                                     ஒருமைத்தன்மை
757. ஏக தாரவிரதம்- ஒரே தார நோன்பு
758. ஏததாளம்- ஒன்றித்தாளம்
759. ஏகதேசம் - ஒருபுடை, வேறுபாடு,
                        மாறுபாடு, சிறுபான்மை,
                                              சமமின்மை
760. ஏகதேசாகாரம்-  அளவுபட்ட வடிவு,
                                                    அளவுரு,
761. ஏகதேசி - ஓரிடத்திருப்புடையது
762. ஏகநாயகன் - தனித்தலைவன்,
                                           தனிநாயகன்
763. ஏக பத்தினி விரதன் - ஒரே மனை
                                                       நோன்பு
764. ஏக போகம் - தன்னுரிமை துய்ப்பு,
                     தன்துய்ப்பு, தனிநுகர்ச்சி,
                                     ஒற்றைவிளைவு
765. ஏகபோகம்- துய்ப்பொருமை,
                            முழுவுரிமைத் துய்ப்பு
766. ஏகம்பம் - ஒருமாவடியன் ஊர்,
                                                காஞ்சிபுரம்
767. ஏகவசனம் - ஒருமையில் உரைப்பு
768. ஏகாதசி - பதினோராம் நாள்
769. ஏகாதிபத்தியம்- தனியரசாட்சி,
                                           முற்றதிகாரம்
770. ஏகாந்தம் - தனிமை, தனியிடம்,
                                                    கமுக்கம்
771. ஏகாம்பரநாதர்- தனிமாவடி நம்பி,
                                                       சிவன்
772. ஏகாம்பரம்- ஒருமாவடியன் ஊர்,
                                              காஞ்சிபுரம்
773. ஏகோபித்தல்- ஒன்றாதல்,
                                          ஒன்றுபடுதல்
774. ஏசு (கிரேக்) Iesous- இசையன்,
                                           இசையிறை
775. ஏசுநாநர் (கிரேக்)- இசையநம்பி
776. ஏட்டு (ஆங்கி)- மேற்காவலன்,
                              தலைமைக்காவலன்
777. ஏர்கண்டிஷண்ட்- தணப்பாடிட்டது
778. ஏர்பஸ்- வானியங்கி
779.ஏர்ஃபோர்ஸ்- வான்படை
780. ஏர்போர்ட் - வானூர்திக்களம்
781. ஏர்மெயில் - வானஞ்சல்
782. ஏர்லைன்ஸ்- வான்வழிகள்
783. ஏராளம் (தெலுங்)- பேராளம்
784. ஏரியல்- வான்கம்பி
785. ஏரியா- பரப்பிடம், பரப்பகம்
786. ஏரோகிராம்- வான்வழி அஞ்சல்
787. ஏரோடிராம்- வானூர்தி நிலையம்
788. ஏரோப்பிளேன்- வானூர்தி
789. ஏலம் - மணகம்
        {(இலாய்ச்சி (பாரசீ)~ ஏலா (சமஸ்)}
790. ஏலம்(போர்த்)- மேலியம்,     
                        மாறேத்தம், பெருவிலை
791. ஏளனம் - இகழ்ச்சி
792. ஏஜென்ட்- முகவர்
793. ஏஜென்சி- முகவாண்மை
794. ஐ.ஏ.எஸ்- இ.ஆ.ஊ (இந்திய
                               ஆளுமை ஊழியம்)
795. ஐக்கியம்- ஒற்றுமை
796. ஐகோர்ட்- உயர் நயன்மன்றம்
797. ஐங்கரன்- ஐங்கையன்,
                                             பிள்ளையார்
798. ஐட்டம்- இனவகை
799. ஐடியா- ஏடல், நுண்கருத்து
800. ஐதீகம்- உலகமுறை, உலகவழக்கு
801. ஐப்பசி- துலாம், துலை
802. ஐராவதம் - தேவர்கோன் யானை
803. ஜரோடு (ஆங்கி)- நெடுச்சாலை
804. ஐ.ஜி ((I G)- தலைமை
                                       உண்ணோட்டகர்
805. ஐஸ்- பனிக்கட்டி, பனிகம்,
                                பனித்திரள், குளிர்ச்சி
806. ஐஸ்கிரீம்- பனிப்பாகு
807. ஐஸ்வர்யம்- செல்வம், சொத்து,
                                               பேறு, திரு
808. ஒப்பீனியன்- கருத்து
809. ஒயர் - கம்பி
810. ஒயின்- கொடிமுந்திரி தேறல்
811.ஒர்க் ஷாப்-பணிமனை, பட்டறை
812. ஒரிஜினல்- மூலம்
813. ஒன்ஸ்மோர்- மறுபடி ஒருமுறை
814. ஓ.கே- அனைத்தும் சரி, சரி,
                                      நிறைவு, ஏற்பே
815. ஓசன்னா (எபிரே)- யாம்
                           கேட்டவாறு காப்பாற்று
816. ஓசி- இரவல், கைப்பேறு
817. ஓட்டு- ஒப்போலை, நேரி
818. ஓடதி- மருந்து, மருந்துப்பூடு,
                                                  அமுதம்
819. ஓமகுண்டம்- வேள்விக்குண்டம்,
                                        வேள்விக்குழி
820. ஓமத்திராவகம்- ஓம நீர், ஓமச்சாறு
821. ஓமப்பொடி (homa podi)- திருநீறு
       (ஓமப்பொடி என்ற உணவின்
                   பெயர் தமிழே)
822. ஓல்டான் (hold on) - நிற்பாட்டு
823. ஓல்ட்டேஜ்- மின்னழுத்தம்
824. ஓவர் ஆலிங்- முழுப் பழதுபார்ப்பு
825. ஓவர் டிராப்ட்- மிகைப்பற்று
826. ஓவர்டேக்- முன்னுந்து, முன்னெடு,
                                           முற்பட்டேறு
827. ஓவர்டைம் - மிகைநேரம்
828.ஓவர்லுக்-கீழ்ப்படுப்பு, மேம்போக்கு
829. ஓனர்- உடைமையர், முதலாளி
830. ஔட்- வெளி, வெளியே
831. ஔஷதம்- மருந்து
832. க்யூ- வரி, வரிசை
833. க்ராக்- அரைக்கிறுக்கு, கோட்டி,
                                     கீறல், வெடிப்பு
834.க்ராப்- ஒழுங்கை
835. க்ராம்- அயிரி
836.க்ரானைட்ஸ்- கருங்கற்கள்
837. க்ராஜூவிட்டி- பணிக்கொடை
838. க்ராஜூவேட்- பட்டந்தாங்கி
839. க்ராஸ்- குறுக்கு, குறுக்கீடு,
                   குறுக்கை, கலப்பினப் பிரிவு
840. க்ரிமினல்- குற்றவியல் சார்ந்த,
                                           குற்றவாளி
841. க்ரீம்- பாலேடு, தீந்தண்பசை
842. க்ரீஸ்- நெய்ப்பசை, உயவுநெய்,
                                                     மசகு
843. க்ரெடிட்- கடன்பற்று, பற்றுவழி
844. க்ரேடு- மேந்தகவு, தகவுப்படி
845. க்ரைண்டர்- அரைவை
846. க்ளாஸ்- ஆடி
847. க்விஸ்- வினா-விடை திறத்தேர்வு
848. க்ளப்- மன்றகம்
849. க்ளாக்- கடிகையாரம்
850. க்ளார்க்கு- எழுத்தர்
851. க்ளாரினெட்- தூம்பியம்
852. க்ளாஸ்- வகுப்பு
853. க்ளிசரின் - கரிநீர்ப்பாகு
854. க்ளிப்- கவ்வி
855. க்ளீனர்- துப்புரவாக்கி, துப்புரவன்
856. க்ளூ- மறைதிறவு
857. க்ளைமாக்ஸ்- முகடு, உச்சம்,
                                             உச்சகட்டம்
858. க்ளோரோபார்ம்- மயக்கமருந்து,
                                                     மயக்கி
859. க்ளௌஸ்- கையுறை
860. கக்கூஸ் (தச்சு)- கழிப்பறை,
                                                கழிவகம்
861. கங்கணம்- காப்புநாண்
862.கங்காதரன்- கங்கைதாங்கி, சிவன்
863. கச்சடா- இழிவு, போக்கிலித்தனம்
864. கச்சா (உருது)- கசண்டுபொருள்,
                  மூலப்பொருள், தூய்தின்மை,
                                        முதிராப்பொருள்
865. கச்சேரி(உருது)- அலுவலகம்,   
               செயலகம், அரங்கம், அவையம்
866. கசகசா(உருது)- கசமத்த விதை,
                                            கசமத்த செடி
867. கசாப்பு (அரபி) - ஊன்குறைப்பு,
     இறைச்சி வெட்டல், புலால் வணிகன்
868.கசாப்பக்கடை(அரபி)- 
                                        இறைச்சிக்கடை
869. கசாயம் (பிராகி)- கருக்கு
870. கசின்- பெற்றோருடன்
    பிறந்தோரின் சேய், தொலையுறவார்
871.கசுமாலம்- அருவருப்பு, அழுக்கு
                        கசண்டு, ஒழுக்கக்கேடு
872. கஞ்சம் (kam ja)- தாமரை, நீர்
873. கஞ்சன்- தாமரையிற்தோன்றி,
                                     நான்முகத்தன்
874.கஞ்சன்(khanja) -நொண்டி,குறளன்
875. கஞ்சா- குல்லை, குல்லைச்செடி,
                          கஞ்சம், கஞ்சங்குல்லை
876. கட்டாரி(தெலுங்)- குத்துக்களி,
                                   குத்தி, குத்து வாள்
877. கட்டிங்பிளையர்- வெட்டுக்குறடு
878. கட்டுமஸ்து- உடற்கட்டு
879. கட்பீஸ்- துண்டுத்துணி
880. கட்லெட்- கறிவடை, விலாவடை,
                                                  கறிகம்
881. கடாட்சம்- கடைக்கண்
882.கடாட்சித்தல்-அருள்
                                        நோக்கச்செய்தல்
883.கடாய்-பொரிசட்டி, பொரிக்குஞ்சட்டி
884. கடிஸ்தலம்- தலைநகர்
885. கடிதாசி (போரத்)- தாள், மடல்,
                     கடிதம், சூதாட்டத் தாளட்டை
886. கண்டக்டர்- நடத்துனர்
887. கண்டம் (ghanta)- மணி
888. கண்டம் (khanda)- கோயில்
                                              முகமண்டபம்
889. கண்டாங்கி- கட்டச்சேலை
890. கண்டிஷன்- நிலைமை,
                            தகவுநிலை, கட்டுவரம்பு
891. கண் திருஷ்டி- கண்ணூறு
892.கதம்பம்- கலம்பம்
893.கதர்(உருது)-கைந்நூல், திரணூல்,
                              முரட்டுடை, கரட்டுடை
894. கதாகாலேஷபம்-
                                    இசைக்கதையாடல்
895. கதா மஞ்சரி-கதைக்கொத்து,
                                      கதைத்தொகுதி
896. கதாயுதம்- தண்டக்கருவி,
                     தண்டப்படை, தண்டாய்தம்
897. கதிரை (போரத்)- நாற்காலி
898. கந்தர் சஷ்டி- கந்தர் ஆறாம் நாள்
899. கப்- கிண்ணம்
900. கப்சா (உருது)- பொய்ச்சொல்,
                        பொய்யுரை, வெற்றுரை
901.கப்பிரஸ்தா (உருது)- கப்பிச்சாலை
902. கப் போர்டு- கிண்ணப் பேழகம்
903. கபம்- கோழை
904. கபாலம்- தலையோடு,
            மண்டையோடு, இரப்போர் கலம்
905. கபாலி- மண்டையோடேந்தி,சிவன்
906. கபிலம்- புகர் நிறம், பழுப்பு நிறம்
907. கபிலன்- புகர்வண்ணன்
908. கபே(பிரஞ்)- குளம்பியகம்
909. கபோதி(தெலுங்)- குருடன், குருடி
910. கம்- பிசின்
911. கம்ப்ளெய்ண்ட்- குறையீடு
912. கம்பனி- குழுமம், நிறுமம்
913. கம்பாசிட்டர்- கோப்பாளர்
914. கம்பார்ட்மெண்ட்- பாகறை
915. கம்பீரம்- வீறு
916. கம்பெல்- வலியுறுத்து
917. கம்மவார்(தெலுங்)- உழவர்
918.கம்மி(உருது)-குறை,குறைவு,மலிவு
919. கம்யூனிசம்- பொதுவுடைமை
920.  கம்யூனிட்டி- குமுகம், இனம்
921. கம்யூனிஸ்ட்- பொதுவுடைமைக்
                                          கொள்கையர்
922. கமலக்கண்ணன்- திருமால்,
                                தாமரைக்கண்ணன்
923. கமலம்- தாமரை
924. கமலஹாசன்- தாமரை நகையன்
925. கமலாலயம்- தாமரைக்கோயில்,
                                               திருவாரூர்
926. கமான்- முன்வா!, முன்னேறி வா!
927. கமாண்டர்- கட்டளையர்
928. கமாண்டு- கட்டளை, கட்டளையிடு
929. கமிட்டி- குழு
930. கமிஷன்- ஆணைக்குழு,
                பொறுப்பாண்மைக்குழு, தரகு
931. கமிஷனர்- ஆணையர்
932. கமென்டரி- விளக்கவுரை
933. கர்க்கரி(karkari)-கரகம்
934. கர்க்கரி(gargari)- தயிர்கடை தாழி
935. கர்ச்சீப்- கைக்குட்டை, கைத்துணி
936. கர்ஸர்(cursor)- ஓடி
937. கர்ணகடூரம்- கன்னக்கடுமை,
    கன்னக்கட்டுரம், செவிபொறா நிலை
938. கர்த்தா- வினைஞன், தலைவன்,
                               கடவுள், வினைமுதல்
939. கர்ப்பக்கிருகம்- கருவறை,
                  அகநாழிகை, உண்ணாழிகை
940. கர்ப்பம்- கரு, கருப்பம்
941. கர்ப்பவதி- பிள்ளைத்தாய்ச்சி,
                                               கருவுற்றாள்
942.கர்ப்பிணி- பிள்ளைத் தாய்ச்சி
943. கர்ப்பூரம்- சூடம், எரியணம்
944. கர்ப்பூரவள்ளி- எரியணவள்ளி
945. கர்மாந்திரம்-இறுதிகருமச் சடங்கு,
          இறுதிக்கடன், நீத்தார் கடைக்கடம்
946. கர்லிங் ஹேர்- சுருண்முடி, சுரிமுடி
947. கர்வம்(garva)- செருக்கு
948. கர்வம்(kharva)- ஆயிரங்கோடி
949. கர்ஜனை- பேரொலி, முழக்கம்
950. கர்ஜிதம்- முழக்கம்
951.கரண்ட்-நடப்பிலுள்ள,   
                                       ஓட்டத்திலுள்ள,
                              மின்னோட்டம் சார்ந்த
952. கரண்டை - நீர்க்கலம்
953. கரன்ஸி- பணத்தாள்
954. கரம் (ksara)- அழிவு, சிறுமை
955. கரம் (khara)- திடம்
956  கரம் (kara)- கை
957. கரம் (khara)- வெப்பம், உண்ணம்,
                        கதிர், இடுமருந்து, கழுதை
958. கரம் (gara)- நஞ்சு
959. கரமசாலா(உருது)- காரமஞ்சனம்,
                                             காரவுசிலை
960. கரஸ்பாண்டென்ட்- தாளாளர்
961.கரஸ்பாண்டென்ஸ்-
                                       தொடர்பாண்மை
962. கராத்தே(சப்பா)-வெறுங்கை,
      வறுங்கை (kara - வெறுமை, te- கை)
963.கரார் (உருது)- உறுதி,நிலைவிலை
964. கருணாகரன்- அருளிருப்பன்
965. கருணாநிதி- அருட்செல்வன்,
                     அருள்நிதியன், அருட்குவை
966. கருணாமூர்த்தி- அருளுருவன்
967. கருணை- அருள்
968. கருத்தரித்தல்- கருத்தாங்குதல்,
                சூலுறுதல், கருக்கொள்ளுதல்
969. கருநாடகம்- பழமையானது,
                                       நாகரிகமானது
                (தமிழில் கல்நாடு~கன்னாடு/ 
                     சமற்கிருதத்தில் கர்நாடகா)
970. கருமாதி- இறுதிக்கடன், நீத்தார்
               இறுதிக்கடன் (கருமம், ஆதி
                                    இரண்டும் தமிழே)
971. கருமி- இவறி
972. கல்கி-குதிரை தோற்றரவு, குதிரை
973.கல்யாணி- நற்குணத்தி,
                                                நற்பண்பள்
974. கல்யாணி- மேற்செம்பாலை
975. கல்லாசாரி- கற்றச்சன்,
                               கல்தச்சர்- தலைவன்
976. கலாச்சாரம்- பண்பாடு
977. கலாசி- முன்கை
978. கலாட்டா(உருது)- கலவாரம்,
                                கலாம், கலகாட்டம்
979. கலாநிதி- கலைநிதி,
              கலைக்குவை, கலைச்செல்வன்
980. கலாபம்- தொகுதி, அம்புக்கூடு
981. கலால்(உருது)- கள், மது
982. கலிங்கம்- குதிரை
983. கலித்தம்- கக்குகை, பொசிகை,
                                               வெடிக்கை
984. கலித்தல்- நழுவுதல்
985. கலியுகம்- இருப்புக்காலவூழி,
                         நான்காமூழி, பொய்யூழி
986. கலெக்டர்- தண்டலர், ஆட்சியர்
987. கலெக்ஷன்ஸ்- திரட்டுகள்
988. கவரிங் லெட்டர்- உள்ளடக்க
                                            விளக்க மடல்
989. கவாத்து qabat (உருது)-
                                       நெறிக்கத்தறிப்பு
990. கவாத்து qawaid (உருது)-
          போர்வீரர் உடற்பயிற்சி, பொருநர்
                    உடற்பயிற்சி, படைப்பயிற்சி
991.கவிச்சக்கரவர்த்தி- பாவலர் கோன்
992. கவிஞன்- பாவலன்
993. கவிதை - பா, பாடல், பாட்டு
994. கவியரங்கம்- பாவரங்கம்
995. கவிராயன்- பாவரையன்
996.கவிவாணன்- பாவாணன்
997. கவுன்- கவ்வுடை
998. கவுன்சில்- மன்றம்
999. கவுன்சிலர்- மன்றவுறுப்பினர்
1000. கவுன்டர்- எண்ணகம்
1001.கவுனி(தெலுங்)-கோட்டைவாயில்
1002.களேபரம்- உடம்பு, எலும்பு, பிணம்
1003.கற்பனா-புனைவெண்ணம்,
                                                 கற்பனை
1004.கறார்(உருது)- உறுதி, ஒரேநிலை,
                                           நிலைவிலை
1005. கன்சல்ட்டண்ட்- கலந்துரைஞர்,
                                  கலந்தாய்வுரைஞர்
1006. கன்சல்ட்டேஷன்- கலந்துரை
1007.கன்செஷன்- சலுகை
1008. கன்ட்ரோல்- கட்டுப்பாடு
1009. கன்ட்ரோலர்- கட்டுப்பாட்டலுவலர்
1010. கன்வீனர்- அமைப்பாளர்
1011. கன்னியாஸ்திரி- கன்னிப்பெண்
1012.கன்ஸ்ட்ரக்சன்ஸ்-கட்டுமானங்கள்
1013.கன்ஸ்யூமர்-நுகர்வோர்
1014.கனக்ஷன்-தொடுப்பு, இணைப்பு
1015.கனகசபை-பொன்னவை
1016.கனகம்-பொன்,பொன் வாய்ப்புள்,
                     சிச்சிலி, சிரல், மீன்கொத்தி
1017.கனகா-பொன், பொன்னி
1018.கனகாம்பரம்-பொன்னாடை
1019.கனகாம்பரம்-பொன்னாடைப்பூ
1020.கனிஷ்டை-கடைசிமகள், தங்கை,
                                                   சிறுவிரல்
1021. கனிஷ்ட்ட குமாரன்- இளைய
                              குமரன், இளைய மகன்
1022. கனிஷ்டன்- இளைய மகன்,
                     கடைசிப்பிள்ளை, கீழ்மகன்
1023. கஜம்- யானை
1024. கஜம்(உருது)- இருகைம்முழம்
1025. கஜானா(அரபி)- கருவூலம்,
                                              வைப்புழி
1026. கஷ்டம்- கடுமை,வருத்தம், துயரம்
1027.கஷாயம்-கருக்கு, கருஞ்சாறு
1028.கஸ்டம்ஸ்- ஆயத்துறை
1029.கஸ்டமர்-வாடிக்கையாளர்
1030.கஸ்தூரி-மான்மதம்
1031.கஸ்தூரிமஞ்சள்-மான்மத மஞ்சள்
1032.காக்கி(பாரசீ)- களிநிறம், களியம்,
     மண்ணிறம்,மண்ணழுக்குவண்ணம்
1033.காகிதம்(மராத்)- தாள், மடல்,
     [Kagaz (அரபி)~kagada(மராத்)]
1034. காங்கிரஸ்-பேராயம்
1035. காங்கெயம்- பொன்
1036. காங்கேயன்- முருகன்,
                                 கங்கையில் தோன்றி
1037. காச நோய்- ஈளை, கோழை
1038. காசம்- நாணல்
1039.காசம்(kaca)-பளிங்கு,கண்ணோய்
1040.காசியார்(உருது)- நயன்குரு
1041. காசினி- நிலம், உலகம்
1042. காஞ்சனா- பொன், பொன்னி
1043. காஞ்சி- மயிர்
1044. காட்டன்- பருத்தி, பருத்தித்துணி
1045. காட்டரேக்ட்- கண்புரை
1046. காடி(உருது)- வண்டி
1047. காடி ghati  (உருது)- அகழி,
                     பொளிவாய், கான்பொளிவு
1048.காண்டம்- குறியுறை
1049. காண்டாமிருகம்- கல்யானை
1050. காண்டீபன்- வில்லவன்
1051.காண்டு(தெலுங்)- சினம்
1052.காத்திரம்-உடம்பு, பாருடம்பு,   
       மெய்யெழுத்து (எ.கா:திடகாத்திரம்)
1053.காதகன்- கொலைஞன்,
                                                கொடியவன்
1054. காதம்- கொலை
1055.காதர்(உருது)- ஆற்றலிறை
1056. காதி(உருது) -இரட்டுத்துணி,
            திரணூல் துணி, கைந்நூலாடை
1057. காந்தன்- கணவன்
1058. காந்தா- மனைவி, பெண்
1059. காப்டன்- தலைவன், கலமீகான்
1060. காப்பி- படி, பகர்ப்பு, சாயற்படி
1061. காப்பி- குளம்பி
1062. காப்பிர் kafir (உருது)-
               கார்மேனியன், கார்வண்ணன்
1063. காப்பிரைட்- பதிப்புரிமை
1064. காப்ஸ்யூல்- பொதிவுறை
1065. காபந்து(உருது)- பாதுகாவல்,
        காப்பு, கவனக் காவல், காப்பளிப்பு
1066. காபரே(பிரான்)- நளிகம்,
                                             களிநளிகம்
1067. காப்பிமார்ட்- குளம்பித்தூளகம்
1068.காப்பி ஹவுஸ்- குளம்பியகம்
1069. கம்போஸ்ட்- சேர்ப்புரம்
1070.காம்ப்ளிமென்டரி- ஈடன்பளிப்பு
1071. காம்பவுண்ட்- அரணகம்
1072. காம்ரேட்- தோழர்
1073. காமதேனு- தேவக ஆன்
1074. காமபீடம்- காம அடிமணை,
                                         காமவிருக்கை
1075. காமாட்சி- காமக்கண்ணி
1076.காமாட்டி(மராத்)- 
              மண்வெட்டுவோன், தோண்டன்,
                                               தோண்டுநன்
1077.காமாலை- மஞ்சணநோய்,
                                            மங்கனோய்
1078. காமிக்- நகையாட்டு, பகடியாட்டம்
1079. காமுகன்- காமகன், காமத்தன்
1080. காமெடியன்- நகையாண்டி,
                                               நையாண்டி
1081.காயகற்பம்- ஆயுள் ஒலியல்
1082. காயத்ரி- கலைமகள், கருங்காலி
1083. காயம்- உடல்
1084. காயில் coil- சுருளை
1085. காயின்- காசு
1086. கார்- இயங்கி, உந்து
1087. கார்க்- தக்கை, தக்கைமூடி
1088. கார்ட்டூன்- கருத்துப்படம்
1089. கார்டியன்- காப்பாளர்
1090. கார்த்திகேயன்- குமரன், முருகன்
1091. கார்த்திகை- அறுமீன்
1092. கார்ப்பெண்ட்டரி ஒர்க்ஸ்-
                                           தச்சுப்பணிகள்
1093. கார்ப்பொரேஷன்- கூட்டு
                       நிறுவனம், கட்டிணையம்,
                                               மாநகராட்சி
1094. கார்பன் பேப்பர் - கரித்தாள்
1095.கார்ப்பெட்-விரிப்பு,விரிப்புத்துகில்
1096.காரணகர்த்தா-   
                                    காரணக்கருமத்தன்
1097. காரட்- மாற்றணம்
                    (24 மாற்றணம்=தூயபொன்)
1098. காரன்டி- பொறுப்புறுதி
1099. காராபூந்தி(உருது)- காரக்
                                                   கோளிகை
1100. காரியக் கமிட்டி- செயற்குழு
1101.காரியதரிசி- செயலர், செயலாளர்
1102.காரியம்- கருமம், செயல்,வினை,
                                                     செய்கை
1103.காரியவாதி- செயற்குறியாளன்,
                                      செயனோக்கன்
1104.காரியஸ்தன்-வினைஞன்,
      தொழில்வல்லான், செயல்வல்லான்
1105.காரு- வண்ணான்
1106. காரு- கம்மாளன், கம்மம்,
                                     கம்மாளத்தொழில்
1107.காருகம்(karuka)- 
                     செய்யுந்தொழில், ஊழியம்
1108.காருகம்(gargha)-இல்லறம்
1109. காருடன்(garuda)- கலுழக்குழாம்,
            கலுழன் தொன்மம், பச்சைக்கல்
1110.காருண்யம்- அருள்
1111.காருணிகன்- அருளி
1112. கால்- அழைப்பு
1113. கால்குலேட்டர்- கணக்கி
1114. கால்சியம்- சுண்ணகம்
1115. கால்ஷீட்- அழைப்பொப்பந்தம்
1116.காலக்கிரமம்-நாளடைவு,
                                காலவரன்முறை
1117. காலண்டர்- நாளிகை
1118.காலத்திரயம்-மூவகைக் காலம்
1119.காலதேச வர்த்தமானம்-
                  கால-இட- நிகழ்ச்சி நிலை,
                கால இடங்களின் நிலைமை
1120.காலமேகம்-காளமுகில்,
                                                 கருமுகில்
1121.காலர்- கழுத்துப்பட்டை, கழுத்தட்டி
1122.காலரா- கக்கல்-கழிச்சல்
1123. காலனி- குடியிருப்பு
1124.காலஹரணம்-காலத்தாழ்ச்சி,
                                                 தாழ்ச்சி
1125.காலக்ஷேபம்-உரையிசைப்
                  பொழிவு, இசைக்கதையாடல்
1226.காலாசுவரம்-கருச்சுரம்,
                                         கருங்காய்ச்சல்
1127. காலாவதி- காலக் கடப்பூறு
1128. காலி (உருது)- வெறுமை,
                     வெற்றிடம், தீர்கை, இன்மை
1129. காலிபிளவர்- காற்பூ
1130. காவாலி(உருது)- திரிநன்,
                           பொறுப்பிலி, ஊர்சுற்றி
1131.காவியம்- பாவியம்
1132. காவு (பிராகி)- பலி,
                                     உயிரிப்படையல்
1133.காளம்- திகிரி, சக்கரக்கருவி
1134.காளமேகம்-காளமுகில்,
                                          கருமுகில்
1135.காளிதாசன்- காளியடியான்
1136. கான்(gan)-இசை
1137.கான் kan (பிராகி)- கன்னம்,
                           செவி, சீர்த்தி, மிகுபுகழ்
1138.கான்கிரீட்- திண்காரை, கற்காரை
1139.கான்ட்ராக்டர்- ஒப்பந்தகர்
1140. கான்டக்ட்-நடத்தை
1141.கான்பிடென்ஸ்-மறைவடக்கம்,
                                               நம்பிக்கை
1142.கான்வென்ட்- கன்னியர்மடம்
1143.கான்வாஸ் ஷூ- கடுந்துணி
                                                        மூடணி
1144.கான்ஸ்டபிள்-காவலர்
1145.கானம்- இசைப்பா, இசையொலி
1146. கானா khanah (பாரசீ)- இல்லம்
1147. கானாப்பாட்டு(பாரசீ)- இல்லிசை,
                                           நாட்டுப்புறப் பா
1148. காஜா(உருது)- துளைத்தையல்
1149.காஜி(அரபி)- நயனக நடுவர், 
                                                   நயனகர்
1150. காஸ்ட்லி-விலையேறிய, மீ
              விலையுள்ள, பெருமதிப்புள்ள
 
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக