ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சும்மாடு

"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-3) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

                                        சும்மாடு

 

சொல் மூலம்:

உம்>சும்> சும்+அடு> சும்மடு (சுமடு) > சும்மாடு

 

சொற்பொருள்கள்:

            சும்மாடு = சுமடு, சுமைதாங்கத் தலைமீது பொருத்திய

            துணி அல்லது மெல்லிய பொருளொன்றின் அடை, சுமையடை

 

             கழக இலக்கிய வழக்கில் ஈரிடங்களிலேயே பயிலப் பெற்றுள்ள, அதுவும் “சும்மாடு" என்ற வடிவிலின்றி, வேறு அமைப்பில் நின்று தோன்றியுள்ள, பொருளியல் தாழ்வுத்தாக்கில் புதையுண்டு அலமரும் ஏழைத் தமிழ்மக்கள் அனைவர்க்கும் ஒட்டுமொத்தமாகப் பொருள் தெரிகின்ற, அது மட்டுமன்றி- அச்சார்பினரில் ஒரு பகுதியினரின் தொழில் சுமைக்கு முட்டுக் கொடுத்துத் தாங்குகின்ற, தலைச்சுமையடையே இந்தச் "சும்மாடு ஆகும்.

 

            “உம்" என்னும் ஒலியே இச்சொல்லின் வேர்; மூலம். இந்த "உம்" என்னும் வேருக்கும் மூலமான விதை, "உ" என்னும் உயர்ச்சிக் கருத்தொலியாகும்.

 

உம் = மேல்.                                                           உம்> உம்பு = மேல்

உம்பு +அர்> உம்பர் = மேல், மேலிடம், உச்சி,

                                                உப்பால்( > அப்பால்)

“அர்”, ஓர் ஈறு.                    ஒ.நோ: கொம்பு +அர்<கொம்பர்

 

சான்று: "நுனிக்கொம்பர் ஏறினார்" (குறள்: 476)

 

            உம் > உம்பு என்பது மேலெழுதற் பொருளில், உப்பையும், மேலெழுதற் போன்று பெருகுதற் கருத்தையும் பெருக்கியவாறு உப்பியது.

 

'உம் பக்கம்' என்பது மேற்பக்கம். உம்பக்கம் > உப்பக்கம்.

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்''                        -(குறள் : 620)

 

            இம் மேற்கண்ட குறளுக்குரிய அனைத்து உரைகளிலும் “உப்பக்கம்'' என்பதற்கு “முதுகுப்பக்கம்" என்று பொருள் குறிக்கப்பட்டுள்ளது என்பதும், முதுகு என்ற சொல்லே முது> முது+ கு> முதுகு என மேன்மைக் கருத்தில் எழுந்துள்ளது என்பதும், புரம்"- என்னும் (மேன்மை ) உயர்ச்சி குறித்தசொல்லினின்றே 'புறம்" மேன்மை , உயர்ச்சி, வெளி ஆகிய கருத்துகட்குரிய செறிவுச் சொல் தோன்றி அதுவே முதுகைக் குறித்தது என்பதும், -ஒரு சேரக் கருதிக் காணவேண்டிய உண்மைகளாகும்.

 

            “புறம் காட்டுதல்" என்பது முதுகு காட்டுதல்; புறம் புல்லுதல் = முதுகைத் தழுவுதல்.

 

            “உம்" என்னும் மேலெழுதற் கருத்து வழியடியே தோன்றிய உமணர் என்னும் சொல் (உம் >உம் + அண்> உமண் >+ அர்> உமணர்), கழக இலக்கியங்களில் இருபத்தியைந்து இடங்களில் பயிலப் பெற்று, அவ்வத்துணை இடங்களிலும் உப்பு வணிகரையே சுட்டுகின்றது. உமட்டியர் (சிறுபாண்: 60) என்பது, உமணக்குலப் பெண்டிரைக் குறிக்கும் சொல்.

 

உம்பு> உப்பு = (உணவுப் பொருளுக்கிடும்) உப்பு (Salt)

ஒ.நோ: கும்பு> குப்பு                  வெம்பு> வெப்பு               செம்பு> செப்பு

 உம்பு+அளம்> உம்பளம் = ''உப்பு விளை கழனி"                   (குறுந்: 269:6)

 

 “உம்பளம் தழீஇய வுயர்மணல் நெடுங்கோட்டு"            (மணி: 24:-27)

 

உம்பளம்> உப்பளம்.

 

"அளமும் கழி நிலமும் உப்பளம் ஆகும்”              (பிங். 3197) .

உம்பு+அல்> உம்பல் = மேல், எழுச்சி (திவா)

                                                வழித்தோன்றல், குடி (பிங்), யானை

            [“பரம்” என்னும் உயர்ச்சிச் சொல்வழி, பரம் + பரம்> பரம்பரம் என்னும் கூட்டுச்சொல் தோன்றி, அதனின்று “பரம்பரை” என்னும் வடசொல் தோன்றியுள்ளமையை, இங்கு ஒப்பு நோக்கிக் காணுதல் வேண்டும்.]

 

            உம்பு+அல் உம்பல் = வழித்தோன்றல்

 “நல்லிசைச் சென்றோர் உம்பல்"               (மலைபடு : 540)

உம்பல் = (உயரிய தோற்றத்ததாய் உள்ளமையின், யானை, “உம்பல்" என்னப்பெற்றது) விலங்கேற்றின் பொது

 

காண்க:       ''யானையும் விலங்கின் ஆண்பாற் பெயரும்

                        குடியும் வழித் தோன்றலும் உம்பல் ஆகும்”        (பிங்கலம்: 3200)

உம்பல் =யானை                                    உம்பற்காடு = யானைக் காடு

            “…………........................................ உம்பற்

            பெருங்காடு இறந்தன ராயினும்"               (அகம்: 357:9-10)

 

            (உரை : யானைகள் வாழுகின்ற பெரிய காட்டினூடே சென்று அப்பாற் போயினரேனும்...)

 

உம் = மேல், முன்.                       உம்+மை உம்மை = மேன்மை, முற்பிறப்பு (!)

 

 ''உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" (மணி: 26:32)

 உம்பு > உம்பு+அர்> உம்பர் = மேல், மேலிடம், உச்சி, உப்பால்

 உம்பர் = உயர்ச்சி (திவாகரம்)

உம்பர் = விண், காயம், வானம்.

                         "உம்பருச்சியில்.......... கதிர்பரப்பு கடவுள்"

                                                                                    (திருவிளை : தண். 22)

 உம்பர் = மேலே

 "யான்வருந்தி உம்பர் இழைத்த நூல்வலயம்"     (பெரியபு. கோச்செங். 5)

உம்பர் = உப்பால் (அப்பால்), மேல்

 

 (1-1) "ஆறைங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்            (சிலம்பு : 10:42)

(1-2) “நெடுவரை வேங்கடத்து உம்பர்" (அகம் : 209:9)

(1-3) “ சிமையக் குன்றத்து உம்பர்" (அகம்: 215:1)

 

 உம்பர் = நெடுந்தொலைவு.

"முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள்"                (நற்: 198:3)

உம்பர் = மேலிடம்                      ''மாடத்து உம்பர்" (ஞானா:9,6)

 உம்பர் = மேலுள்ளதாக அறியாது கற்பித்த ஒரு கற்பனை உலகம் (!)

 

                        “உம்பர்க் கிடந்துண்ண                       (நாலடி: 37)

 உம்பு+அன்> உம்பன் = உயர்ந்தோன்.

உம்பு+அர் >உம்பர் = உயர் நிலையோர்; மேல்

“உயர் நிலையோரும் மிசையும் உம்பர்”- (பிங்கலம்: 3199)

“உம்பர் என்பது உயர்ச்சியைக் குறிக்கும்” என்னும் திவாகரம்.

 

            முன்மைக் கருத்தைக் கருவாகக் கொண்ட “உ” என்னும் தொல்லொலி, உயர்ச்சிக் கருத்துப் போங்கில் செழித்த நிலையில் சில விளர்ச்சிக் காட்டுகளாவன:

 உ>உய் = மேற்செல்

உய்+கு> உய்கு, உகு = உயர்ந்திரு, மேலிரு.

உகு + அப்பு > உகப்பு = உயர்ச்சி.  (ஒ. நோ: தொல். உரியியல் : 302)

உய்> உய்+வு> உய்வு > உவு

உவு >உவ = மேலெழு, உயர்.

 உவ+வு > உவவு = மதியம், முழு நிலா

            “உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை" (புறம் 3:1)

உவவு > உவா.

ஒ.நோ: நிலவு > நிலா                புறவு > புறா          இறவு > இறா

பலவு > பலா

உவா= முழு நிலா

            “உவாமதி கிடக்கும் குண்டுகடல்" (கல்லா : 41:25)

 

            உயர்ந்து முழுவடிவில் ஒளிறும் தண்மதி, உயர்ச்சிக் கருத்தை அடையாகக் கொண்டு "உவவுமதி" என்றவாறும், ''உவாமதி" என்றவாறும் சுட்டப்பெற்றன.

உ = முன்மைச்சுட்டு.

உ+அன் > உவன் = முன் நிற்பவன்

                        “பார்த்தான் உவன்"                   (பரிபா: 12:55)

உ+அள்> உவள் = முன் நிற்பவள்

                        ''படையுவள் கண்"                     (பரிபா: 11: 123)

 (முன்மைச் சுட்டு, பின்னர் உயர்ச்சியைச் சுட்டிச் செழித்தது.)

 உய் > உய்வு > உவு +அ> உவ = மேலெழு

 உவ+(ப்) +பு> உவப்பு = உயர்ச்சி, உயரம் (பிங்கலம்)

உவ+வு > உவவு >உவா = உயரிய தோற்றமுடையதாகிய யானை

                        ''உவாவணி யூர்ந்தாயு நீ" (கலித்: 97)

 உவு+அர்> உவர் = உயர், உப்பு.

                        உவர்+ கடல் > உவர்க்கடல் = உப்புக்கடல்

                        உவர்+ நீர் >உவர் நீர் = உப்பு நீர் (பிங்)

                        உவர்+இ > உவரி = உப்பு நீர் உள்ளதாகிய கடல்

 உவர்> (தெலுங்கு) ஒகரு, (கன்னடம்) (துளு) ஒகர்,(மலையாளம்) உவர்

 உவு+ அண்>உவண் = மேலிடம் (சீவக : 2853)

 உவண்+அம்> உவணம் = உயர்ச்சி (திவா)

 உவணம் = மிக உயரப் பறக்கும் பறவை, கழுகு , கலுழன்

உவண்+ஐ = உவணை = மேலுலகம் (!)

உவணம் = கழுகு                        உவணம்> சுவணம் = கழுகு

                        (யாழ். வழக்கு) கருடன் (சங். அக)

 சுவணம் (Ski) su-parna.

உவர்> சுவர் = உயரிதாக நிலை நிறுத்தப் பெற்ற மதில்

(1-1) "நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில்"      (பெரும்பா : 189)

 (1-2) 'நெடுஞ்சுவர்ப் பல்லி"                (நற்: 189:3)

சுவர்> (Skt) Svar

            > Svarga = மேலுலகம்

             "உவ" (உவர்) என்னும் உயர்ச்சிக் கருத்து வடிவம், செந்தமிழ் மொழியினின்று பரவிச் சென்று, பன்னூற்றுக் கணக்கான மொழிகளில் பல்வேறு வகைப்பட்ட வடிவுகளில் படிந்து பரக்க வழங்கப் பெறுகின்றது.

 

உவ>

            > (Prakrit):                 ubbha = high, up, best

                                                ubbhëi  = raises

                                                ubbhiya = raised

             (Rāmbani dialect of Kashmiri in Jammu): ubhu

            (Poguli dialect of Kashmiri): ubha  = up

            (Sindhi):                      ubho = upright

            (Lahnda):                    ubbha = land up river

            (Awānkāri dialect of Lahnda): ubbhā = upper

             (Panjabi):                   ūbh  = upwards

            (West pahāri):

             (Bhadrawāhi dialect): ubbo = rising

            (Kumauni):                 ubh, ubho = high

             (Tibetan):                   ublā = upwards

            (Nepāli):                     ubho = high, being above

            (Bengali):                    ubhā = high, tall

            (Oriya):                       ubha = high, tall

            (Hindi):                       ūbh i = upright

            (Old Mārwāri):           ūbhau

            (Gujarati):                   ūbhū

            (Konkani):                   ubho

உம்பு > உம்பர் > (உப்பர் ):

                        >(Skt)                         uppara=above

                        >(Assamese): opar = upper, height, top

                        >(Bengali): upar = the top

                        >(Oriya): upara = the top, above

            (Skt) uppari = above

            (Nidoc) (Language of Kharoşthi inscriptions): upari

             (Prakrit): upparim

            (Gypsy: Armenian:    upra = from above

                                                upar = on

            (European Gypsy):    opre, upo = on, over

                                                upar = on.

            Kashmiri: wupar = above.

             Panjābi: uppar = on, above

            Kumauni: upar

            Nepali: upar

            Assamese:      upari = Over and above

                                    Opare = above

            Bengali upar = on

            Oriya: upari

             Maithili: ūpar

            Hindi: ūpar

            Old Marwari: ūpar

            Old Gujarati: ūpari

            Gujarati: upari

            Marathi: upar

             (Skt) ubbar = rise

            (Oriya): ubaribā, uburo = to rise

            Marathi: ubarne = to rise

பிற அயன் மொழிகளில் :

            Greek: uper                            Dutch: Over

            Gothic: ufar                            Anglo-saxon: ofer

            Old High German: ubar        Middle English: ouer

            German: uber                        English: Over

            Swedish: ofver

            Danish: over

            Icelandic: ofr

உவ>

(Old High German): ūf

Gothic iup                              Swedish: upp

Icelandic: upp                        Dutch: op      

Danish: op

Anglo-Saxon: up, upp

Middle English: up

 English: up = towards a higher place

> (Greek)        uper = high

                        uperos= upper

 > (Latin)        S-uperus> superus > super= above

 > (English) Super = above (prefix)

 

            உயர்ச்சிக்கருத்தில் எழுந்து புடை நிரம்பிச் செழித்து வளர்ந்த "உம்" என்னும் வேர்ச்சொல்லானது,- தமிழ்ச் சொல்லியலின் வளர்ச்சியாக்கத்தின் ஒரு போங்கான “உயிர்மிசைச் சகரமெய்யேறுகை" அடிப்படையில் உம்> “சும் " என்றவாறு மெய்ம்மிகையேறி மிளிர்ந்தது.

 

            அந்தி > சந்தி, அமம் > சமம், அமயம்> சமயம், அமர் > சமர் என்பன போலும் திரிபேற்புகள், இங்கு மீளவுங் கருதிப் பார்த்துக் கொள்ள வேண்டியனவாகும்.

 

            "சும்" என்னும் உயர்ச்சிக் கருத்துத் திரிபுவேர், ''சும” என்ற வினைச் சொல்லாக நின்று, மேல் தூக்கு , மேலெழுப்பு, மேலாகத் தாங்கு, பொறு என்றவாறான பொருட் சுமைகளைச் சுமந்து நின்றது.

 

சும்>சும = மேல் தூக்கு , மேலேந்து

            "கைசுமந்து அலரும் பூசல்"    (பதிற். பத்:31:3)

            (பழைய உரை:) கைகளைத் தலைமேலேந்தி தம் குறையை எடுத்துக் கூறி வேண்டிக் கொள்ளும் ஆரவாரம்…….''

 

சும = சுமையைத் தாங்கு

சும + (த்)+து> சுமத்து = சுமையேற்று, சுமக்க வை

சுமத்து+ தல் >சுமத்துதல் = பிறர்மேல் அல்லது பிறிதொன்றன்மேல்                                                                            சுமக்க வைத்தல்,

            சுமத்தல் என்பது,- மேல் தூக்குதல், தாங்குதல், சார் தல் என்றவாறு பொருளூட்டம் பெற்றுச் சென்றது.

 (1-1) "பரித்தல், பொறுத்தல், தரித்தல், சுமத்தல்"         (பிங்: 1978)

(1-2) “தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல்

                                    சுமத்தலின்பேர்"              (சூடா. நி. 9: 59:1)

 சுமந்து = தாங்கி, ஏந்தி

(1-1)       ''....................................................................மஞ்சு சுமந்து

            ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்"     (அகம்: 72: 9-10)

 

(1-2) ............................................................... பூண்சுமந்து

            அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகம்"              (புறம் : 68:5)

(1-3) “மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன"              (பெரும்பாண் : 49)

 சுமக்க = தாங்குக.

            "செறுநரைக் காணின் சுமக்க"                     (குறள்: 488)

சுமப்ப = தாங்க

            “பவழம் புனைந்த பரிதி சுமப்ப”                 (கலி:80)

 

சும+தி >சுமதி = 1. பாரம் (சங். அக) 2. பொறுப்பு,

                                    3. சுமை தலை (யாழ். வழக்கு)

 சும் >சும்மை > சுமை = மேல் உள்ள எடை, சுமத்தற்குரிய

                                    பொருள், பொறுப்பு

''சுமையொடு மேல் வைப்பு ஆமாறு" (பழமொழி: 215:4)

 சுமை >சுமை+ காரன்> சுமைகாரன் = சுமை தூக்குவோன்

 சுமை + தாங்கி >சுமைதாங்கி = சுமையை இறக்கி, தலைச்சுமை ஆற்ற                             உதவுகின்ற வகையில் நிறுத்தப் பெற்றுள்ள கற்கட்டு.

"சுமைதாங்கி மேற் சாத்துவர்" (திருவிளை : விறகு: 16.)

சும்> சும= மேலேந்து, தாங்கு, பொறு.

 சும் >சும்+அடு> சும்மடு > சுமடு = சுமையைத் தாங்கத் தலைமீது       பொருத்திய அல்லது கோலிய துணி, அல்லது மெல்லிய

             பொருளொன்றின் அடை.

[“மக்கள் தழையுடையே கட்டியிருந்த, துணியறியாத காலத்தே, சும்மாடானது- தழைகளாலும் பூங்கொத்து அடைகளினாலும் தலையின் மீது தாங்கிடைப் பொருளாக வைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்"]

            கழக இலக்கியப் பரப்பிடத்தில், பெரும்பாணாற்றுப் படையிலும் முல்லைக் கலியிலும் மட்டுமே, மொத்தம் ஈரிடங்களிலேயே, இந்தச் “சுமடு" என்னும் அடிப்படைச் சொல் படிவம் படிந்திருக்கின்றது.

(1-1) "இவள் தான் திருத்தாச் சுமட்டினள் (கலித்: 9:13)

            (திருத்தமாக வைக்கப் பெறாத சுமடு, திருத்தாச் சுமடு எனக் குறிக்கப் பெற்றுள்ளது)

(1-2) “புகர்வாய்க் குழிசி பூஞ்சுமடு இரீஇ போகி"      (பெரும்பாண் : 155)

(நச். உரை : தயிர் புள்ளியாகத் தெறித்த வாயையுடைய மோர்ப்பானையைப் பூவாற் செய்த சுமட்டைத் தலையிலே வைத்து முற்கூறிய குறிஞ்சி நிலத்து ஏறப்போய்...)

 

பூஞ்சுமடு = பூவாற் கோலப் பெற்ற சும்மாடு.

 சும் + அடு>சும்+(ம்) + அடு > சும்மடு > சுமடு

சும்மடு > சும்மாடு

                        ஒ.நோ: வளகம் > வளாகம்

                                    நடத்து> நடாத்து

 

            ''சுமடு" என்பதுவும் “சுமையடை'' என்பதுவும் வேறுவேறு அடிப்படையை உடையவை.முன்னது,-"சும்மடு" என்னும் சொல்லின் தொகுத்தல் திரிபாலும், பின்னது.- சுமை என்னும் பெயர்ச்சொல்லொடு அடையென்னும் பின்னடை அடுத்தலாலும் தோன்றியுள்ள தனித்த வீற்று வீற்று வளர்ச்சிப் படிவங்களாகும்.

 

“சுடுவு சுமடு சுமையடை சும்மாடு" (பிங்கலம்: 1304)

“ சுமடு சுடுவும் சுமையடை சும்மாடே” (பிங்கலம்: 1701)

 

            "சும்மாடு" என்றவாறு குறுந்திரிபடைந்த சொல், இன்று கொச்சை வழக்கில் “சிம்மாடு" என்றவாறு மேலும் பெருந்திரிபுற்று வழங்குகின்றது.

 

            இனி,- சுமடு, சும்மாடு, சுமப்பு, சுமை, சுமதி என்பன போலும் பல்வேறு வளர்ச்சி வடிவங்களுக்கும் முன் மூலமான, உயர்ச்சிக் கருத்துப் பக்கவேரான "சும்” என்பது, பிற அயன் மொழிகளில் திரிபெய்தியும் எய்தாதும் வழங்கி வரு நிலையை. ஓர்ந்துணர சில காண்போம்:

 

 சும் >

 (Latin) Summus = Uppermost, highest, topmost, the tip of, highest part of

            Summus = He who sits in the highest place, at the head of the table.

            Summum = at the atmost or farthest

                        = for the last time, of rank etc, highest, greatest. first, supreme, best,                          utmost. extreme

            Summē = In the highest degree, most highly or greatly.

            Summo-tēnus = Up to the top.

            Summa: (Old. Gen) Summai

            (1) Lit, That which is highest in anything

                        the top, summit, surface.

             (2) Authority over all affairs, the supreme power

            Summas = Of high or noble birth, high born.

            Summitas = (summus) the highest part, height, top, summit

            Sūmo = To take

            Sumere = To take

 [>(English)    Assume = Take or put on oneself.

                        Assuming = Taking much upon oneself

                        >(M.E.) F. L. Assumere

> Assumption            = Act of assuming.]

>(Latin) > (French) Somme = sum, burden, load,

                        (Bete de somme = Beast of burden)

                         (French)         Sommet = Summit, top, apex, height, zenith

                                                Sommitē = Summit, top

                        (English)         Summit= Highest point, top, apex, highest degree.

 

சும>(Latin): Summa> (Latin) Summare>

            (Old French) > Sommer

             (Old French) Summe, somme>

             (English) sum = Total amount resulting from addition of items.

 

 தமிழிய மொழிகளில்:

 Telugu:          Cumma

                        Cumpāta = Carrying pad.

Malayalam:    Cuma = burden, load

                        Cumakka = to carry a burden. Cumatu = burden, load.

                        Cumatala = Charged duty (சுமைதலை)

                         Cumattuke = to load.

                        Cummal = load.

                        Cummātu = pad for head to Carry burden.

                         Cummuka = to bear, carry.
 Kannada:       Simbe = ring of cloth to be put under
a vessel etc. upon the head.

                        Sivudu = pad to be put under a load on the head.

Naiki:              Cumma= pad on head for carrying.

Parji:               Cumtal = carrying pad on head.

வடபால் மொழிகளில் :

Pali:                 Cumbata, Cumbataka = coil, pad of cloth.

Hindi:              Cummai, cumli = pad of cloth.

Marathi:          Cumbal = head pad.

 

 

 

 

மின்னெழுத்தில் வடித்தது,

 

பெஞ்சமின் பிராங்கிளின்பி

14 மடங்கல் 2051

/ /௨०௫௧]

(30-08-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக