"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்
ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-3) "
நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
சமம்
சொல் மூலம்:
உம்> அம்> அம்
+அம்> அமம்> சமம்
சொற்பொருள்கள்:
சமம் = ஒப்பு,
பொருத்தம், இணைவு, இணை, நடுவு
நிலைமை, ஒத்தபொருள், ஏற்றத் தாழ்வின்மை,
போர், போரிடுங்களம்
அகரவுயிர் ஏறிய
சகர மெய்யாகிய “ச" என்னும் ஒலியை முற்கொண்டவாறு, தமிழ்மொழிக்கண்ணே சொற்கள்
தோன்றுமா தோன்றாவா, அல்லது- அவை தமிழுக்க உரியவா உரியவல்லாவா என்னும் மொழியியல்
சிக்கல், இற்றைக்கு இருபத்தியாறு இருபத்தியேழு நூற்றாண்டுகளுக்கு முற்பாடேயே
தோன்றிய தாகும். அத்தொடர்ச் சிக்கலால் தமிழ்மொழியின் ஒரு பகுதியில் பேராளமான சொல்
வழக்காற்று நலுக்கம் ஏற்பட்டுப் போயிற்று.
சா, சி, சீ, சு,
சூ, செ, சே, சொ, சோ எனவரும் இவ்வொன்பது (தொண்டு) ஒலியெழுத்துகளின் பாங்கில்,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பெரும்
பரவலாக அடர்ந்து சடைத்திருக்கையில், சகரத்தை முன் தொடங்கியவாறு மட்டும்
தமிழ்ச்சொற்கள் தமிழில் தோன்றில என்பது, இயல்புக்கும் தமிழியற்கைக்கும்
உண்மைக்கும் ஏரண அடிப்படைக்கும் மிக மாறான அல்லது எதிரதான ஒரு பெரு வியப்புடைய
அறியாமைக் கருத்தாகும்.
“சகரக்
கிளவியும் அவற்றோ ரற்றே" என்ற தொல்காப்பியரின் ஆப்பு வைத்த யாப்புக்கு
முன்னரே, "அகத்தியர் " என்றிருந்தவரும் இதே போலும் செருக்கிய
அழுத்தமொன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
ஏதோ ஒரு
துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உயர்ந்துவிட்ட ஒருவனை, அதன்வழித் தாம்
கவர்புற்று வயப்பட்ட பொதுமக்கள், தம்மை வழி நடத்தும் தகுதியையும் அவனுக்கு அளித்து
விடுவது போன்று,- அனைவோரிலும் மேம்பட்ட பொது இலக்கணத் தகுதி கொண்டிருந்ததாகத்
தோன்றுகின்ற அவ் அகத்தியனார், பின்னர் வந்த தொல்காப்பியனார் மற்றும் அன்னோரன்ன பிற
திறத்தாரின் அறிவுப் பொதுக் கொழுமை கண்டு, அவர்களின் சொற்கேட்டு, வழிபற்றி
அக்காலத் தமிழ்ப்புலவோர்,மெய்யொடுங்கியும் வாயடங்கியும் அமைந்திருந்து
சொல்லொடுக்கி மொழிமுடக்கி விட்டதாகவே தோன்றுகின்றது.
எழுதப்பெற்ற
அவ்வகையான இலக்கணக் கட்டையும் அமைப்பையும் மட்டுமே பார்த்துப் பயின்று, முன்
நினைவும் ஆய்வுணர்வும் இன்றி, எறும்பூர்கையாகப் பின்பற்றி வந்த புலவர்
பெருமக்களையும் கற்றோரையும் தவிர, எதுபற்றியும் கவலாத மற்ற கல்லாப் பொதுமாந்தர்
யாவரும், தாம்பாட்டுக்கும் இயல்பொழுங்காய்த் தோன்றித் தொடர்ந்து வந்த சகரமுதற்
சொற்களைப் பயன்படுத்தியும், புதுச்சொற்களைத் தமிழியல்பினூடே உருவாக்கியும்,
மொழியியல்பையும் போங்கையும் கெடவிடாது அகமுகமாகக் காத்து வந்துள்ளமை, தமிழ்
வரலாற்றில் தலைப்பிட்டுக் குறிக்கவேண்டிய அரும்பெரும் செய்தியாகும்.
(தய் > தயை >
தசை) தயை என்பதன் படி நிலைத் திரிபான
“தசை" என்னும் சொல்லையும் கூடச், ''சதை" என்றவாறு இடம்
பெயரல் (Metathesis) கொள்ளக் கொண்டு, பரவலாக மக்கள் வழங்கி வருகின்ற அளவுக்குச்
சகரமுதற்கிளவி, தமிழ்மொழிக்கு இயல்பான தாகும் என்பதை அறிதல் வேண்டும்.
மொழிக் கலப்பால்
செம்மொழி ஒன்றனுக்குக் கேடு நேர்வது உறுதியானது போலவே, ஒலிக்கலப்பாலும் அல்லது ஒலிக்
குழப்பத்தாலும் பெருங்கேடு வந்தெய்துவதும் உறுதி என்பதற்கு, தமிழ் மொழிக்கண்
நேர்ந்த இந்தச் சகர நலுக்கம், ஓர் அரும் பெருஞ் சான்றாகும்.
ஒலிக் கலப்பால்
தான், சிலம்பு படைத்த இளங்கோ அடிகளின் பிறப்பிடமான சேரலம் (பதிற்றுப்பத்துப்
பிறந்த அந்தத் தமிழ நாட்டுப் பகுதி), ஆழ்வார்கள் பாடிய திருவேங்கடம் போலும்
நிலப்பகுதிகளும் தமிழகத்தினின்று பிரிந்து ஒதுங்கின.
(“ச்ச") ச
என்ற சகர உயிர்மெய், தொடக்கத்தில் வெடி உயிர்ப்பொலியாகத் (Voiceless Plosive)
தோன்றிப், பின்னர் பல் வண்ண ஒலி வேறுபாடுகளில் படிவுற்றுத் தமிழில் மிகப் பயன்பாட்டு
நிலை பெற்றிருந்தது.
ஜ,ஸ, க்ஷ, (ச்)
ச என்றவாறுள்ள நால்வகைப் பிரிவு ஒலிவண்ணங்களையும் 'ச' என்ற ஒரே வரிவடிவே,
இடத்திற்குத் தகத் தாங்கி நின்றியன்றது.
(ச்)ச-ஒலி: ஒலித்துக்காண்க!:
பச்சை, கச்சு , தச்சு
ஸ-ஒலி : “ : பசி,
காசு, நேசம், பாசம்
க்ஷ -ஒலி : “ : கட்சி, காட்சி,
வெட்சி, மாட்சி
ஜ-ஒலி : “ : இஞ்சி, மஞ்சள், பஞ்சு, நஞ்சு
நான்கு ஒலிப்
பிரிவுகளையும் இடத்திற்குத் தகச் சுட்டும் அருந்தகைமை பெற்றுத் தொடர்ந்த
சுமையாளாகச் "சகரம்"
இயங்கினமையால், ஆரிய அயன் மொழித் தாக்கம் தொடங்கிய
போழ்து, அஃதுடனேயே இந்நிலைச் சிக்கலும் தோன்றிவிட்டது.
“சுல்” என்ற
மூலவேரிலே கிளைத்து நின்ற சகரமுதற் கிளவிகளின் தோற்றம் மட்டுமல்லாமல்,
உயிரொலிகளின் மீது சகர மெய்யேறி அவ்வழியாகக் கிளைத்த சகரமுதற் கிளவிகளின் தோற்றம்
மட்டுமல்லாமல், நேரிடையாகவே அகரமுதற் சொற்கள் பலவற்றின்மீது சகரமெய்
இணைந்திழைந்து, நூற்றுக்கும் மேற்பட்டுச், சகரமுதற் கிளவிகள் தமிழ்மொழியில்
இயல்புப் போங்காய்த் தோன்றியுள்ளன.
"உம்"
: கூடுதற் கருத்தின் மூலப்பொருளை உள்ளடக்கியிருந்த அரிய வேரொலி.
“உ"
என்னும் உயர்ச்சிக் கருத்தின் விதையில் தோன்றி, உ>உம் என்றவாறு உயர்ச்சிக் கருத்தூட்டப்
போங்கில் சென்ற உம்>உம்பு > உம்பு +அர்> உம்பர் போலும் படிநிலை
விளர்ச்சியாக்கங்கள் இதனின்றும் வேறாய கோணமுடையன.
உம்: கூடுதல்
கருத்துவேர்.
எண்ணும்மையாகவும்,
எதிர்மறையும்மையாகவும், சிறப்பும்மையாகவும், ஐயவும்மையாகவும், எச்சவும்மையாகவும்,
முற்றும்மையாகவும், தெரிநிலையும்மையாகவும், ஆக்கவும்மையாகவும்,
இவ்வேர்ச்சொல் பயிலப் பெறுகின்ற இடங்களில் கூடுதற் கருத்தைச் செறித்து நிறைத்துக்
கொண்டுள்ள அடிப்படை இயல்புண்மையைக் காணலாம்.
அவனும் அவளும்,
சேரனும் சோழனும் பாண்டியனும்- என்றவாறு வரும் எண்ணும்மையிடங்கள்,- தெளிவான
சான்றுகளைக் காட்டுவனவாகும். பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்று
ஈறாகவும், ஏவற்பன்மையீறாகவும், எதிர்காலப் பெயரெச்சவீறாகவும், வியங்கோள்
துணையீறாகவும், விரைவுப் பொருளைக் காட்டும் வினையெச்சவீறாகவும், இது இயங்கும்
இடங்களிலெல்லாம் கூடுதற் கருத்தின் போங்கு உள்ளுறைந்திருப்பதை உணரலாகும்.
உம் >அம். (உகர
அகரத் திரிபு)
அம் = பொருந்துகை, கூடுகை.
அம் = அழகு
(1-1) "அம்சினை " (குறுந்: 22:4)
(1-2) "அம்சிறைத் தும்பி காமம் செப்பாது
கண்டது மொழிமோ
!” (குறுந்: 2:1-2)
(பொருந்துகைக் கருத்தில் "அம்" என்னும் சொல்லுக்கு
அழகென்னும் கருத்துப் பொருந்தியது. பொருந்தியிருக்கின்ற ஒன்று அழகாயிருத்தலின்...)
ஒ.நோ: தகு=
பொருந்து, சேர். தகு > தகை = அழகு புலத்தகை
(குறள் : 1305) = புலவியழகு .
“தளிர் ஏர் ஆகம்
தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலை" (அகம்: 177: 18-19)
அம்= அழகு அம்>+மை
> அம்மை = அழகு.
''அழகும் வருபிறப்பும் தாயும் அம்மை” (பிங்கலம் : 3072)
அம்மை = நூல் வனப்புகளுள்
ஒன்று.
“அம்மைதானே அடி நிமிர்பின்றே" (தொல். பொருள் : 547)
அம் > அம்+ஐ> அமை =
பொருந்து, நெருங்கு, கூடு, செறி.
அமை = பொருந்து
"செய்தாங்கு அமையாக்
கடை" (குறள்:
803)
அமை = நெருங்கு, செறி
(1-1)
“வழையமை சாரல்" (மலைபடு
: 18)
(1-2)
''வழையமை சிலம்பு" (நற்:
227:7)
(1-3)
''வழையமை நறுஞ்சாரல்" (கலி:
51:1)
(சுரபுன்னை
செறிந்து நிற்கின்ற நறிய சாரல்)
அமை> அமை+தி> அமைதி
= பொருந்தியிருக்கை,
ஒன்றியிருக்கை,
அமைந்திருக்கை.
“தி”- ஒரு பண்புப் பெயர் ஈறு.
ஒ.நோ: மற>
மற+தி> மறதி.
(அமைவர. -மது. காஞ். 326)
நச். உரை: பொருந்துதல்
தோன்ற)
அமை+பு> அமைப்பு =
பொருத்தம், கட்டுமானம்.
அமை+வு> அமைவு =
பொருந்துகை, ஏற்றதாகை,
அமைதியாயிருக்கை
அமை> அமை+ அம் >அமையம்> அமயம் = பொருந்திய
நேரம்,
ஏற்றகாலம், காலம், பொழுது, நேரம்.
“நேர்"
என்னும் கூடுதற் கருத்து வினை முதனிலையினின்று
நேர் >நேர் + அம்>
நேரம் என்று பொழுதையும் காலத்தையும் குறித்தற்குச் சொல்லாக்கம்
நேர்ந்திருப்பதையும், ''ஓர்" என்ற ஒன்றுதல் கருத்துடைய சொல்லினின்று ஓர் >ஓர்
+ ஐ > ஓரை என்றவாறாகி நேரத்தையும் முழுத்தத்தையும் குறித்து நிற்பதையும் இங்கு
ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும்.
அமையம் >அமயம்:
(1-1) "சென்ற காலமும்
வரூஉம் அமயமும்" (மது. காஞ்.
477)
(நச், உரை : சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்.....)
(12) "மழை அமைந்துற்ற அரை நாள் அமயமும்" (மது. காஞ். 649)
(அரை நாள் அமயம் : நச். உரை: நடு நாளாகிய
பொழுதிலும்...)
(1-3) 'கதிர் சினம் தணிந்த
அமையத்துக் கழிமின்" (மலைபடு :
375)
(நச் உரை: ஞாயிறு சினம்
மாறின அந்திப் பொழுதிலே போவீர்....)
(1-4) 'நறுங் கதுப்பு
உளரிய நன்னர் அமையத்து" (அகம்:
39:22)
அம் + அல்> அமல் =
பொருந்து, நெருங்கு, செறி, சேர்.
(1-1)
''வழை அமல் அடுக்கம்" (அகம்:
328:1)
(1-2)
"வேய் அமல் அகலறை" (கலித்
: 45:1)
அமல் >அமலு + தல்
>அமலுதல் = சேருதல் (நாநார்த்த
தீபிகை)
(அமல்>) அமன்ற =
நெருங்கிய , செறிந்த
(1-1) "ஆம்பல் அமன்ற
தீம்பெரும் பழனத்து" (நற்:200:6)
(உரை: ஆம்பல் நெருங்கிய
இனிய பெரிய வயலையுடைய )
(1-3)
“ கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரை" (மது. காஞ்;710)
(நச்.உரை:
கயத்தமன்ற = குளத்திலே நெருங்கின...)
அமல்+ஐ> அமலை =
சோற்றுத் திரளை.
"வெண்ணெறந் தியற்றிய மாக்கண் அமலை" (மலை: 441)
அமலை = பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்து வீரர் திரண்டு
ஆடும்
ஆட்டம்
"பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும்" (தொல்.
புறத். 2:14:10-11)
(அமலை என்பது,
வீரர் திரண்டு ஆடும் ஆட்டமன்று , பாட்டு என்பார் இளம்பூரணர்)
அம்> அம்+அர் >அமர் = பொருந்து, ஒன்று, இணை, சேர்,
வேலையில் அமர்தல் = வேலையில் சேர்தல்.
அமர் = பொருந்து
"கன்று அமர் நிரையோடு கானத்து அல்கி " (பெரும்பாண்: 176)
(நச்.
உரை: கன்றுகள் பொருந்தின 'பசு'த் திரளோடே காட்டிலே தங்கி……..)
அமர் + அல்> அமரல் = நெருக்கம் (பொதிகை நிகண்டு)
அமர் = பொருந்து.
"பூங்குழைக்கு அமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்" (நெடுநல்: 38)
அமர் + தல் > அமர்தல் = பொருந்துதல், உள்ளத்தோடு
பொருந்துதல்,
விரும்புதல்.
நெஞ்சு அமர்ந்தோள் = உள்ளத்தில் பொருந்தியவளாகிய காதலி.
அமர் = விரும்பு, விழை, காதல் கொள்
“அமர்தல்
மேவல்" (தொல், சொல் :
உரி:82)
மேவல் என்பது விருப்பக் கருத்தையும் நசைக்
கருத்தையும் தருவது என்பதற்கு விளக்கமாகத் தம் நூலின் உரியியல் பகுதியின்
இன்னுமோரிடத்தில் "நம்பும் மேவும் நசையாகும்மே" (தொல். சொல். உரி:31)
என்பார்.
(அமர் = விருப்பம், உள்ள விருப்பம், காதல்.)
அமர் > (Latin) Amor = love.
Amorusus
= love.
> (French)
amour = love.
> (English) amorous = Inclined to esp. sexual love, in
love or pertaining to love.
amorist
= one who professes esp. sexual love; one who writes of love.
> Paramour = Illicit lover of married man or Woman.
(கள்ளக்
காதலன் அல்லது கள்ளக் காதலி)
> enamour = Inspire
with love or liking.
[<(O.F.)
enamourer.]
அமரியள் = விரும்பினவள்.
"ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி" (புறம்: 339:12)
(உரை: தன்
பொருட்டு வேந்தர்கள் கடத்தற்கரிய
போர் செய்வதை விரும்பினவள் போல………....)
அமர் = பொருந்து, போரிடு.
அமர்செய்தல் = போர் செய்தல்.
அமர்+ களம் > அமர்க்களம் = போர்க்களம்
அமர்+அகம்> அமரகம் = போரகம், போர்க்களம்.
“அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா'' (குறள்:812)
அமர் = போர்,
(1-1) "ஆர் அமர் ஓட்டலும்;
ஆ பெயர்த்துத் தருதலும்"
(தொல்.
புறத்: 5:11)
(ஆர் அமர் ஓட்டல் = குறுநில மன்னரும் காட்டகத்து வாழும் மறவரும்
போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டல்...)
(1-1) “சுற்று அமர் ஒழிய
வென்றி கைக் கொண்டு” (தொல். புறத் : 11:3)
(1-2) “பேரமர் உழந்த வெருவரு
பறந்தலை” (புறம் 270:11)
பொருந்துதல்
கருத்தில் “அமர்" என்ற சொல் உருவாகியுள்ளமையைப் “போர்" என்ற
சொல்லுருவாக்கத்தோடு ஒப்பிட்டுக் காண்பது, இவ்விடத்தே பொருத்தமுடையதாகும்.
பொரு = பொருந்து பொரு+(த்)+து > பொருத்து
பொரு > பொரு+து > பொருது = எதிர்த்துத் தாக்கு
பொரு + தல்> பொருதல் பொருது + தல்> பொருதுதல்
பொரு > போர். ஒ.நோ:
கரு> கார்
இவ்வாறு, "உம்" என்பதன் பக்கவேரான “அம்” என்பது,
அம்,
அம்மை, அமை, அமைதி,
அமையம், அமல், அமலை, அமர் என்றவாறான கிளைச்சொற்களைப் பொருந்துதல் செறிதல் கருத்தடிப்படையில்
பன்வகையூட்டங்களையும் பெற்ற நிலையில் தோற்றியுள்ளது.
தமிழ்
நெடுங்கணக்கில் அமைந்த மெய்யெழுத்தொலிகளில்,
வேறு எந்த ஒன்றுக்கும் அமையாத தனித்த முன்னேற்றத் துடிதுடிப்பு,
சகரமெய்க்குத் தொடக்கத்தில் இருந்துள்ளது. சில உயிரொலித் தொடக்கமான சொற்களின்
முன்னீடு சென்று பொருந்தப் படிந்து கொண்டொலிக்கும்.
அம்+து > அந்து = சேர் அந்து + இ
> அந்தி.
அந்தி = சேர்க்கை ,
கூடுகை, கலக்கை ,
மாலையும்
இரவும் கலக்கும் நேரம்,
இரவும் காலையும் கலக்கும் நேரம்
ஒ.நோ: "காலை யந்தியும் மாலை யந்தியும்" (புறம்:34:8)
அந்தி – மாலையந்தி
"அந்தி மாட்டிய நந்தா
விளக்கின்" (பட்:
247)
(உரை: அந்திக்
காலத்தே கொளுத்தின அவியாத விளக்கினையுமுடைய...)
அந்தியில்
இசைக்கும் முரசம் அந்திப்பணை” என்னப் பெற்றது.
“அந்திக் காவலர்
அம்பணை யிமிழிசை"
(அகம்:124:14)
அந்து> சந்து = கூடுகை, சேர்க்கை , இணைவு, சமன்மை, அமைதி
அந்தி > சந்தி = கூடுமிடம், கூடல்.
ஒ.நோ:
முச்சந்தி, நாற்சந்தி.
சந்தி+பு> சந்திப்பு = சந்திக்கை.
அம் (கூடுதற்கருத்துக் கிளைவேர்)
அம்> (சம்) (Sanskrit) Sam
அந்தி > சந்தி > (Sanskrit) Samdhi
Pali:
Sandhi = joint
Prakrit: Samdhi
= joint
Kashmiri: Sand = meeting
Sindhi: Sandhu =
joint
Sandho=
joint
ஓர் எடுத்துக் காட்டு:
அய் (அகரத்து
இம்பர் யகரப் புள்ளி) < நுண்மை , மென்மை ஆகிய கருத்துகளின் மூலவேர்.
-அகரத்திம்பர்
யகரப் புள்ளியானது, "ஐ" என்னும் நெடுஞ்சினையாக நின்று தனியெழுத்துப்
பெற்றும், நுண்மைக் கருத்தை விடவில்லை.
காண்க: “அரியே ஐம்மை" என்னும் தொல்காப்பிய நூற்பா
(தொல், உரி: 352), ஐ என்பதன் சாறப் பொருளை அப்படியே பிழிந்து தருகின்றது.
ஐ >ஐ+து >ஐது = நுண்ணியது, நொய்யது, மெல்லியது.
"ஐது
அமை நுசுப்பு" (அகம்:
75:18)
அய்> அய் + இர்> அயிர் = நுண்மணல்
(அயிர்
+ அம் >அயிரம் >ஆயிரம்)
அய்து> ஆய்து (முதலுயிர் நீட்சி; ஆதி நீடல்)
ஆய்து = நுண்ணியது.
ஆய்து+ அம் ஆய்தம் = நுண்ணிய ஒலி, அஃகேனம்
"ஆய்தம்
நிலையலும் வரை நிலை யின்றே
தகரம் வரூஉம்
காலை யான” (தொல். எழுத். 8:104)
ஆய்+தல்> ஆய்தல் =
நுண்மை , நுணுக்கம், மென்மை ,
நுணுகிப்பார்க்கை.
ஆய் > சாய்
“ஓய்தல் ஆய்தல்
நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும்
உள்ள தன் நுணுக்கம்"
(தொல்.
உரி:34) (326)
ஆய்தல் = நுணுக்கம். சாய் = நுணுக்கம்.
உரியியல் பகுதியின் இன்னுமோரிடத்தில், “சாயல் மென்மை "
(உரி: 321) (29) என்னும் படி நிலை வளர்ச்சிக் கருத்தையும்
தொல்காப்பியர் சுட்டுவார்.
சாயல் = மென்மை .
''புதுநிறை வந்த
புனலம் சாயல்" (மலை:61)
(உரை:
புதுப்பெருக்காய் வந்த நீர்போலும் அழகையுடைய மென்மையினையும்...)
சாய்+இனம் >சாயினம் = மெல்லிய மகளிர் ஆயம்.
"துவ்வா நறவின்
சாயினத் தானே!" (பதிற். பத்:
60:12)
உ.வே.சா: உரை: “உண்ணப்படாத
‘நறவு' என்னும் ஊரின் கண்ணே மென்மையுடைய மகளிரினத்திடையே உள்ளான்."
(சாயினம் - இவர் பாட்டாலும் கூத்தாலும் சொல்லாலும்
சோனுக்கு மகிழ்ச்சி செய்யும் மகளிர்)
ஒ.நோ: “இன்னகை ஆய்மோடு இருந்தோற் குறுகி"
(சிறுபாண்
: 220)
இவ் வகை
முறையிலேயே, “அம்” என்னும் கூடுகைப் (இணைகை) பொருள் செறிந்த பக்க வேரினின்று, அம்
> அம் + அம் >அமம் >சமம் என்றாகி இணைவு, இணை, ஒப்பு, நடுவு நிலைமை, போர்,
போரிடும் களம் என்றவாறெல்லாம் பொருள் வளர்ச்சிப் பெற்றுள்ளது.
அமை>சமை
அமைத்தல் = உருவாக்கல், செய்தல்.
"அடியேன்
அறியேன் ஆயினும் வேந்தர்
முடிமுதற்
கலன்கள் சமைப்பேன் யான் என"
(சிலம்பு:
கொலைக்: 113-114)
சமைப்பேன் = ஆக்குவேன், செய்வேன்
“நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து"
(சிலம்பு:
உரைபெறு கட்டுரை: 14)
சமைத்து = அமைத்து.
அமையம் >அமயம்
அமயம் > சமயம் = நேரம், காலம், பொழுது.
சமயம் (Sanskrit) Samaya = time.
பிற வடபால்
மொழிகளில் சமயம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் திரிபுகள் :
Pali: Samaya = time
Prakrit: Samaya =time.
Labnda: Samā = season
Gujarati: Same = time, season, occasion
Sinhalese: Samiyen = time.
Hindi: Sama = time.
அம்> அம்+அர்> அமர் = போர். அமர்> சமர் = போர்
அமர்+அம்> அமரம் = போர்.
அமர்+அன்> அமரன் = மறவன், போர்வீரன்.
(''அமரன் ஆயின்” பெருங். உஞ்சைக். 37:202)
அமரம் >சமரம் (Sanskrit) Samara
சமர்+ (த்)+து> சமர்த்து = திறம், ஆற்றல்
சமர்த்து
> (Sanskrit) Samartha
அம்> அம்+அம்>
அமம்>சமம் = இணைவு, இணை, சேர்க்கை , ஒப்பு .
(ஒ.நோ: அவர்
எனக்குச் சமமானவர் = அவர் எனக்கு இணையானவர்)
இணை, ஒப்பு, நடு
ஆகிய பொருள்களில் முதற்கண் பயிலப்பெற்றுப், பின்னர்,- - படையோடு படை பொருதுவதாகிய
போரைக் (அமர்) குறிக்கும் சிறப்புச் சொல்லாகச் சிறக்கப் பயன்படுத்தும் நிலை,
நிலைப்பூன்றவே,- நடுவு நிலைமை, நடுமை போலும் பொருள்களில் ஆளப்பெற்ற சமம் என்னும்
சொல்லை, மயக்கம் போக்கும் வகையில், (சமம் > சமன்) சமன் என்றவடிவில் செந்தமிழ்த்
திறப்புலவோர் தத்தம் இலக்கிய ஆக்கங்களிடையே ஆள்வாராயினர்.
சமம் > சமன்.
ஒ.நோ: உரம்> உரன் திறம்> திறன் குலம்> குலன்
வலம் >வலன். கடம் >கடன் கலம்> கலன்
சமன் = நடுமை, நடுவு நிலைமை.
(1-1)
'' வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோ னுடன்" (சிலம்பு: 3:93)
(1-2) “ சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்" (குறள்: 118)
(1-3) "எவ்வழிப் பட்டாய் சமனாக
இவ்வெள்ளல்" (கலி: 97:5)
பொரு > போர்.
அமர்> சமர்
இம்மேற்கண்ட
கருத்தொருமிப்புக் காரணவடிக்களன் கொண்ட "சமம்" என்னும் இணைகைக்
கருத்துச்சொல்லும்,- போரைக் குறித்தும் பொருந்தி நின்றது.
(1-1) “அருஞ்சமம் கடந்து படிமம் வாங்கிய” (149:3)
(1-2) ''அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்சுடர்
ஆடவர்" (188:5)
(1-3) "கடாஅ யானை குழூஉச் சமந்ததைய" (230:4)
(1-4) ''வில் ஈண்டு அருஞ்சமம்
ததைய நூறி" (381-13)
என்றவாறு
அகநானூற்றில் வரும் பல இடங்களும்,-
(1-5) "எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள்” (39:11)
(1-6) ''அருஞ்சமம் சிதையத் தாக்கி" (72:8)
(1-7) “விரைந்து வந்து சமந் தாங்கிய" (125:13)
(1-8) "அருஞ்சமம் வருகுவதாயின்" (139:14)
(1-9) "இருஞ்சமம் கடந்த" (309:2)
என்றவாறு புறநானூற்றில்
வரும் பல இடங்களும், - மற்றைய கழக ஆட்சிகள் சிலவும் , “சமம்" என்னும்
சொல்லுக்குப் “போர்" என்னும் சிறப்புப் பொருள் உள்ளமையைத் துலக்கமாகக்
காட்டுகின்றன.
சமம் = போர்க்களம்
"முழக்கென இடியென முன் சமத்து ஆர்ப்ப" (கலி: 101:10)
சகர முதற்கிளவி தமிழ்
மொழிக்கு உரிய தன்று என்றவாறான ஏமாற்றுக்கும் மருள் மயக்கத்துக்கும்
ஆட்பட்டியங்கிய அந்தக் காலப் புலவர் பெருமக்களாலேயே, அவர்கள் யாத்தளித்துள்ள கழக
இலக்கியங்களின் உள்ளோடேயே, இச் 'சமம்" என்னும் சொல் ஐம்பத்தியோரிடங்களில்
அழுத்தமாகப் பயிலப் பெற்றுள்ளமையில், இதன் தமிழ்மையின் தழைப்புத் தெளியத்
துலங்குகின்றது!
போரைக் குறிக்கும் “சமம்" என்னும்
சொல்லுக்கு முந்தையப் பொருள்கள் இணை, இணைவு, ஒப்பு, நடுமை , நடுவுநிலைமை என்பன
ஆகும். போரைக் குறித்த பொருளில் “சமம்" என்னும் சொல்லொன்று சமற்கிருதத்தில்
இன்மை மிகவும் குறிக்கத் தக்கதாகும்.
“சமம்"
என்னும் இணைவு, இணை, நடுவுநிலைமை ஆகிய பொருள்கள் குறித்த செஞ்சொல், சமற்கிருதத்தில்
அம்மீறு கெடுத்தவாறு “Sama" என்ற வடிவில் திரிபடைந்தது.
சமம் > (Skt) Sama = equal, alike, level
(Samam
= equally, together with)
சமம் + காலம் > (Skt) Samakāla = Simultaneously
(சமனம்) சமம் > (Skt)
Samāna = Same, alike.
பிற வடபால் மொழிகளில் இச் “சமம்" என்னும் சொல்லின்
திரிபுகளாவன: Prakrit: Sama = equal, like, level.
Pali: Sama = equal to, like.
Samam
= equally, together with
Pashai: Sam =
straight
Dameli: Sam
= equal to, like
Bashkarik: Sam = flat
Sindhi: Sama = equal, like
North west Prakrit: Samu =
with
Language of Kharosthi: Samao = equal
Tirāhi (Dard): Sama = equal, with
Rumbūr dialect of Kalasha:| Sam = with
Khohistani: Sum = with
'சமம்' என்னும்
செந்தமிழ்ச் சொல்லினின்று கொண்ட “சம" என்னும் திரிபுச் சொல்லுக்குச்,
சமற்கிருதவாணர் காட்டும் மூலமாக "சம்" என்பதுவும், - ஒன்றுகை கூடுகை
இணைகைப் பொருள் பொதிந்த "அம்" என்பதினின்றே உருத்திரிந்ததாகும். அத்தொடு
மட்டுமின்றி, "அம்" என்னும் செந்தமிழ்ச் சொற் கிளைவேருக்கு மேலும் மிக
முந்திய வரலாறு உள்ளமையை, மொழியியல்வாணர் உணருதல் வேண்டும்.
பிற அயன்
மொழிகளில் ''சமம்" என்னும் செந்தமிழ்ச் சொல்லின் திரிபுகளாவன:
சமம்> (Russian) : Samuii
= the same
Gothic:
Sama = the same
Swedish: Samme = the same
Danish: Samme = the same
Icelandic: Samr = the same
Anglo saxon: Same
Middle English: Same
(English): Same - of the like kind, identical,
சமம் > (Latin) Sëmi = half
Semis = half
> Similis = a Comparison, likeness, Parallel.
> Simultar = in like manner
> Similitas = likeness
> Simulo = to make a thing like
another
> Simul = the same (time), together
(Simul)> (English) assemble = gather together
(L)
ad = to. simul = together
> assemblage
= Bringing or coming together.
> re
assemble
>
resemble< ((L) Similus > similare>
(OF) > sembler + re sembler
>
(Eng)
resemble]
> facimile =
Exact copy of writing
facere = to make
simile: reut. of similis = like.
> assimilate - Make like
> (L)
Assimilare. < Similis = like
சமம் > (L) Similis =
like
> (English)
Simulate - to pretend
> (L) Simul
(Eng)
Simultaneous = happening at the same moment.
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
31 கடகம் 2051
[ ௩ ௧/० ௭/௨०௫௧]
(15-08-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக