கிறித்தவப் பெயர்கள் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். மொழிபெயர்த்த எனக்கு, இந்த தமிழ்ப் பெயர்கள் மக்களை ஈர்க்கும் படியாக இருப்பதாகத் தெரியவில்லை. கீழே குறிப்பிட்டுள்ள பெயர்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். இந்த தமிழ்ப் பெயர்களில் மாற்றமோ அல்லது திருத்தமோ தேவை என்றால் நீங்கள் கூறுங்கள். தகுந்தப் பெயர் என்றால் ஏற்கிறேன்.
Aaron -ஒளி /பொலிவன் /குவின்/ முழா
Abel - மூச்சுவன் /நீராவியன்
Abraham - மூப்பன்/ அத்தன்
Adam - ஆதன்/ நிலமகன்/ தலையன் /தரையன்
Adriel - இறைமலர்/ தெய்வமலர் /தெய்வப்பூ
Albert - சான்றோன்/ ஒள் /ஒள்வன்
Allen - கல்/ அந்தம்/ ஒப்புரவு
Amos = சுமைதாங்கி/ தாங்கி / பொறுவன்
Andrew - வல்லன்/ மறவன்/ உரவன்
Antony - மலர் / மதியோன்
Ben -மகன்
Benjamin -வலங்கை மகன் /தென்மகன் / வலங்கையன்
Christ - முழுகோன்/ திருமுழுக்கன்
Christopher - முழுகோன்தாங்கி
Clement -மென்மை /இரக்கம்
Daniel - இறைநடுவன்
David -நண்பன்
Edwin -செல்வத்தோழன்
Francis - பிரான்சியன்/ கட்டற்றன் /தளையிலன்
Franklin - கட்டற்றன் /நிலவுடைமை
Gabriel -எல்மகன்/ இறைவீரன்
George - உழவன்
Grace -அருள் /அருளறன் /அகத்துறுப்பன்
Immanuel - கடவுள் நம்மோடு/ அருகிறை/ நம்மோடிறை
Isaiah - இறைமீட்பன்/ உய்கையன்/ உய்தியன்
Ivan - அருளிறை /அருள்
Jacob -பின்வரல் /பதிலீடு/ மாற்றீடு
James - பின்வரல் /பதிலீடு/ மாற்றீடு
Joel - இறைவன்/ கோவிறை/ இறைக்கோ
John -இறையருள்/ அருள்
Johnson - அருள்மகன்
Jokin -நிறுவுகடவுள் / இறைநிறுவன்
Jones - இறைநன்மை /கடவுள் /ஆதலி
Joseph -வளன்
Jovin -அருளிறை
Lazar -இறையுதவி /தொழுநோயாளி /அழுக்கிரப்பாளி
Mathew -இறைக்கொடை/ கொடை/ ஈவு
Micheal - யாரிறையிணை / இறையிணையிலான்
Miller - அரைப்பன்
Moses - எடுவன் / எடுக்கப்பட்டோன்
Paul - சின்னப்பன் /குட்டி
Stalin - இரும்பு/ உருக்கு
Stephen - முடியப்பன் /வாகைசூடன்
Thomas - இரட்டை
Xavier - ஒளி /ஒண்மன்/ இல் /வீடு
இவண் ,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
25 சிலை 2021
(09-01-2022).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக